Published : 20 Feb 2015 10:54 AM
Last Updated : 20 Feb 2015 10:55 AM
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கன மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக, ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நேற்று மூடப்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்து காவல் துறை மூத்த கண்காணிப் பாளர் (நெடுஞ்சாலை) சஞ்சய் கோட்வால் கூறியதாவது:
மாநிலத்தில் கனமழை பெய்து வருவதுடன் பனிப்பொழிவும் அதிக மாக உள்ளது. இதனால் 300 கி.மீ. நீளம் கொண்ட ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து இந்த நெடுஞ்சாலை மூடப் பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை யில் புதிதாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஏற்கெனவே அந்த சாலையில் தேங்கியுள்ள வாகனங்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றன. மழை மற்றும் பனிப்பொழிவு குறைந்த பிறகு நெடுஞ்சாலையை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.