Published : 20 Feb 2015 10:03 AM
Last Updated : 20 Feb 2015 10:03 AM

தனியார் உரக் கடைகளுக்கு முறைகேடாக யூரியா விற்பனை: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் - யூரியா இருப்பு விவரத்தை வெளியிட ஆட்சியர் உத்தரவு

வேளாண் கூட்டுறவு வங்கி களில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளதாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. தனியார் கடைகளுக்கு உரங்களை மறை முகமாக வேளாண்துறையினர் விற்பனை செய்வதாகவும் ஆட்சி யரிடம் விவசாயிகள் நேரடியாக புகார் தெரிவித்தனர். இதை யடுத்து, யூரியா இருப்பு விவரங் களை வேளாண் வங்கிகளின் அறிவிப்பு பலகைகளில் வெளியிடு மாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலக கட்டிடத்தில், மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய விவசாயி கள், ‘கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில், வேளாண் கூட்டுறவு வங்கி யில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. தனியார் உரக் கடைகளில் தரமில்லா யூரியா அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவித்தோம்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சி யரின் உத்தரவின்பேரில் அனைத்து வேளாண் வங்கிகளில் யூரியா கிடைக்க நடவடிக்கை யும், தனியார் உரக் கடை களில் ஆய்வும் மேற்கொள்ளப் பட்டன.

இதனால், கூட்டுறவு வங்கி களில் யூரியா தட்டுப்பாடின்றி கிடைத்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வேளாண் கூட் டுறவு வங்கிகளுக்கு அனுப்பப் படும் யூரியா, முறைகேடாக தனியார் உரக் கடைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது’ என்று புகார் தெரிவித்தனர்.

மேலும், புகார் தெரிவிக்கும் எங்களை பற்றி, வேளாண் துறையினர் சம்பந்தப்பட்ட நபர் களுக்கு அடையாளம் கூறிவிடு கின்றனர். இதனால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம் என்றும் குற்றம்சாட்டினர்.

மாவட்ட ஆட்சியர் சண்முகம் பேசியதாவது: வேளாண் கூட்டு றவு வங்கிகளில் தட்டுப்பாடின்றி யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வேளாண் வங்கிகளில் யூரியா வின் விலை, இருப்பு மற்றும் விற்பனை விவரங்களை அறி விப்பு பலகையின் மூலம் விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடுகிறேன்.

விவசாயிகளுக்கு தொல்லை தரும் காட்டுப் பன்றிகள் மற்றும் குரங்குகளைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள் ளுமாறு வனத்துறைக்கு அறிவுறுத் தப்படும். வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரும் கோரிக்கை அரசு பரிசீலனையில் உள்ளது. பிச்சுவாக்கம் பகுதியில் புறக் காவல் நிலையம் அமைப்பது தொடர்பாக, மாவட்ட போலீ ஸாரிடம் பரிந்துரை செய்யப் படும்.

யூரியா தொடர்பாக புகார் தெரிவிக்கும் நபர்களை, அடை யாளம் காட்டுவது குறித்த புகார் மீது சம்பந்தப்பட்ட துறை யினரிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x