Last Updated : 20 Mar, 2015 09:48 AM

 

Published : 20 Mar 2015 09:48 AM
Last Updated : 20 Mar 2015 09:48 AM

பிஹாரில் தேர்வு: 515 மாணவர்கள் சிக்கினர்

பிஹார் மாநிலத்தில் நடைபெற்ற மெட்ரிகுலேஷன் (10-ம் வகுப்பு) பொதுத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 515 பேர் பிடிபட்டனர்.

தலைநகர் பாட்னாவிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள மனார் கிராமத்தில் உள்ள வித்யா நிகேதன் பள்ளி யின் 4 மாடி கொண்ட தேர்வு மையத்தின் சுவர் மீது மாணவர்களின் பெற்றோரும், நண்பர்களும் ஏறி அவர்களுக்கு விடை எழுதிய சீட்டுகளை கொடுத்துள்ளனர்.

இந்த நிகழ்வை சிலர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 515 மாணவர்கள் காப்பி அடிப்பது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு தேர்வு மையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ரோஹ்டாஸ், சிவான் ஆகிய பகுதிகளில் மாணவர்களுக்கு துண்டு சீட்டு வழங்கியதாக 7 பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாநில அமைச்சர் பி.சாஹி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x