Last Updated : 24 Feb, 2015 09:40 AM

 

Published : 24 Feb 2015 09:40 AM
Last Updated : 24 Feb 2015 09:40 AM

மே.இ.தீவுகள்- ஜிம்பாப்வே இன்று மோதல்

கான்பெராவில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளும், ஜிம்பாப்வேயும் மோதுகின்றன.

பாகிஸ்தானுக்கு எதிராக அபார வெற்றி கண்டதன் மூலம் எளிதில் கணிக்கமுடியாத அணியாக உருவெடுத்துள்ள மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வேவுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டுவைன் ஸ்மித், சாமுவேல்ஸ், சிம்மன்ஸ், ரஸல், ராம்தின், சமி என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஜெரோம் டெய்லர், கேப்டன் ஜேசன் ஹோல்டர், ரஸல், சமி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

இதுவரை ஒரு தோல்வி, ஒரு வெற்றியைச் சந்தித்துள்ள ஜிம்பாப்வே, இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆட முயற்சிக்கும். சிக்கந்தர் ராஸா, சகாப்வா, வில்லியம்ஸ், மஸகட்ஸா, டெய்லர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.

இதுவரை…

ஜிம்பாப்வேக்கு எதிராக கடைசியாக விளையாடிய 7 ஒருநாள் ஆட்டங்களிலும் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி கண்டுள்ளது. இதுதவிர உலகக் கோப்பையில் இவ்விரு அணிகளும் 5 முறை மோதியுள்ளன. அவையனைத்திலும் மேற்கிந்தியத் தீவுகளே வெற்றி கண்டுள்ளது.

பிராவோ விளையாடமாட்டார்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது இடது தொடைப் பகுதியில் காயமடைந்த மேற்கிந்தியத் தீவுகள் பேட்ஸ்மேன் டேரன் பிராவோ இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x