Published : 19 Feb 2015 10:55 AM
Last Updated : 19 Feb 2015 10:55 AM

அலட்சியத்தால் பலியான குழந்தை

தெலங்கானாவில் பணி நேரத்தில் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்ட தாய், தனது குழந்தையையே இழந்து நிற்கிறார்.

தாய்மையடைந்த நிலையில் வேலைக்குச் செல்லும் போது பெண்களுக்குச் சட்டம் கொடுக்கும் பாதுகாப்பு மற்றும் சலுகைகள்பற்றி ‘மகப்பேறு நலச் சட்டம்- 1961’ விளக்குகிறது.

தாய்மையடைந்துள்ள ஒரு பெண் மற்றும் அவள் ஈன்றெடுக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது, குழந்தைப்பேறுக்குச் சில நாட்கள் முன்பும் பின்பும் சராசரிப் பணி செய்ய இயலாத தாய்க்கும் சேய்க்கும் தேவையான விடுப்புடன் கூடிய பொருளாதாரச் சலுகை மற்றும் இதரச் சலுகைகள் அளிப்பது என்ற நோக்கிலேயே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் இச்சட்டத்தை அமல்படுத்துவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, இந்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், தெலங்கானாவில் நிகழ்ந்தது போன்ற அநியாய உயிரிழப்பு தவிர்க்கப்படும்.

- மா. சேரலாதன்,தர்மபுரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x