Published : 05 Jul 2014 13:20 pm

Updated : 05 Jul 2014 13:22 pm

 

Published : 05 Jul 2014 01:20 PM
Last Updated : 05 Jul 2014 01:22 PM

ஷரபோவாவுக்கு சச்சின் ரசிகர்கள் பதிலடி

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரைத் தெரியாது என்று கூறிய ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா வுக்கு சமூக வலைதளம் மூலம் பதிலடி கொடுத்துள்ளனர் சச்சின் ரசிகர்கள்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியைக் காண லண்டன் சென்றுள்ள சச்சின், இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஆன்ட்ரூ ஸ்டிராஸ், முன்னாள் கால்பந்து கேப்டன் டேவிட் பெக்காம் ஆகியோருடன் அமர்ந்து போட்டியைக் கண்டுகளித்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஷரபோவா, பெக்காம் குறித்து பேசினார். இதையடுத்து பெக்காம் அருகில் இருந்த சச்சினை தெரியுமா என செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பியபோது தனக்கு தெரியாது என அவர் கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்துள்ள சச்சின் ரசிகர்கள், ஷரபோவாவுக்கு எதிராக அவருடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ் புக் பக்கத்தில் விமர்சனக் கணைகளை தொடுத்துள்ளனர். அதில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கருத்துகள் பதிவாகியுள்ளன. அதில் ரசிகர் ஒருவர், “நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். ஆனால் இனி உங்களின் ஆட்டத்தைப் பார்க்கமாட்டேன்” எனக் கூறியிருப்பதோடு சில மோசமான வார்த்தைகளையும் வெளியிட்டுள்ளார். ஷரபோவாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் நீங்கள் ஒரு முட்டாள் என்றும், சச்சினிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர்ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாசமூக வலைதளம்சச்சின் ரசிகர்கள்

You May Like

More From This Category

More From this Author