Last Updated : 25 Feb, 2015 01:16 PM

 

Published : 25 Feb 2015 01:16 PM
Last Updated : 25 Feb 2015 01:16 PM

அமெரிக்காவில் இந்து கோயில் மீதான தாக்குதல்: விசாரணை நடத்த மும்மதத் தலைவர்கள் வலியுறுத்தல்

வாஷிங்டனில் அமைந்துள்ள இந்துக் கோயில் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலை முன்வைத்து, அமெரிக்காவில் பெருகி வரும் வெறுப்பு நோக்கத்திலான வன்முறைகளை விசாரிக்க மும்மதத் தலைவர்கள் வலியுறுத்தினர்.

அமெரிக்காவில் தொடர்ந்து நடந்து வரும் வெறுப்பு நோக்கத்திலான வன்முறைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டில் வாழும் பல மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் அமெரிக்க புலனாய்வுத் துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து அமெரிக்க வாழ் இஸ்லாமிய சபையின் தலைவர் அர்சாலன் புகாரி கூறும்போது, "நமது நாட்டில் வளர்ந்து வரும் வன்முறை உணர்வு கவலை அளிப்பதாக உள்ளது. அதிலும் மற்றவர்கள் மீதான வெறுப்பு நோக்கத்திலான வன்முறைகளை வளரவிடுவதை தடுப்பதும். அத்தகைய நோக்கம் ஏற்படுவதன் காரணத்தை கண்டறிவது அவசியமாகும்.

பல்வேறு சேர்ந்தவர்கள் இங்கு வாழ்கிறோம். நமது குழந்தைகள் அனைவரும் அச்சமின்றி பள்ளிக்கும் கோயில்களுக்கு சென்று வர வேண்டியது அவசியம்.

மதம், இனம், அல்லது அது போன்ற வேறு காரணங்களால் பாதுகாக்கப்பின்மை ஏற்படும் சூழல் இனி ஏற்படாது என்பதையும் இவ்வாறான வன்முறைகளுக்கு எதிராக வலிமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அமெரிக்க புலனாய்வுத் துறையும் வழக்கறிஞர் அலுவலகமும் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

கடந்த 17-ஆம் தேதி வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள இந்துக் கோயில் மீது மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. அதோடு, கோயிலின் சுவற்றில் "கெட் அவுட்" (வெளியேறுங்கள் ) என ஸ்ப்ரே பெயின்ட் மூலம் எழுதப்பட்டிருந்தது.

அதேப் போல, ஸ்கை வியூ ஜூனியர் ஹை என்ற பள்ளியின் சுவற்றிலும் "முஸ்லிம்ஸ் கெட் அவுட்" (இஸ்லாமியர்கள் வெளியேறுங்கள்) என எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x