Published : 06 Sep 2014 12:08 PM
Last Updated : 06 Sep 2014 12:08 PM

தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் தேவை: பிரணாப் முகர்ஜி: 357 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தேசிய ஆசிரியர் விருது வழங்கும் விழா வெள்ளிக் கிழமை நடந்தது. இதில், நாடு முழுவதுமிருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட 357 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார்.

விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது:

கல்வியின் தரத்தை மேம்படுத்து வதற்கு, தகுதிமிக்க, அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆசிரியர்கள் தான் இந்தியாவின் தற்போதைய தேவை.

கல்வித்தரத்தை மேம்படுத்து வதில் ஆசிரியர்கள் பெரும்பங் காற்றுகின்றனர். கல்வித் தரம் என்பது தகுதியான ஆசிரியர்களின் நேரடி விளைவாகும்.

தரமான கல்வியின் மூலம் இந்தியாவை வலிமை மிக்க நாடாக மாற்ற முடியும். கல்வித் துறையில் தேசம் அதிக அளவு முதலீடு செய்கிறது. சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் ரூ. 29 ஆயிரம் கோடியும், ராஷ்ட்ரீய மத்யாமிக் சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் ரூ.5,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய பயிற்சி உபகரணங்கள், ஆசிரியர்களை ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றுக்காக பள்ளி தரமதிப்பீட்டுத் திட்டம் பண்டிட் மதன் மோகன் மாளவியா புதிய ஆசிரியர் பயிற்சித் திட்டம் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.

மாறும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களை விரைவாக புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும். குழந்தைகளை தகுதிவாய்ந்த, அறிவுப்பூர்வமான, மதிப்புமிக்க உலகக் குடிமக்களாக மாற்றும் வகையில் ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்.

வன்முறை, தீவிரவாதம், சகிப்புத்தன்மையற்ற நிலை, சுற்றுச்சூழல் தரக்குறைவு போன்ற சவால்களை உலகம் எதிர்கொள்கிறது. உலகம் வாழத்தகுதியான பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டுமெனில் உண்மை, சகிப்புத் தன்மை, நேர்மை, மதச்சார்பின்மை, ஒருங் கிணைந்த செயல்பாடு ஆகியவை நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். ஆசிரியர் கள் இதை நினைவில் கொண்டு அவர்களை வழிநடத்த வேண்டும்.

கற்பித்தல் தரம், உள்வாங்கும் திறனை பள்ளிகளில் மேம்படுத்து வதன் அவசியத்தைப் புரிந்திருக் கிறோம். திறன் மிக்க ஆசிரியர்கள் இன்றி இதனைச் சாதிக்க முடியாது.

போதிய கழிப்பறைகளுடன் கூடிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டப் பட்டு வருகின்றன. தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஆசிரியர்கள் சவுகரியமாக உணர வேண்டும். தொழில்நுட்பத்தின் முழு பலனையும் மாணவர்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். அதன் மூலம், தொழில்நுட்பத் திறன், தரமான உயர்கல்வி ஆகியவற்றை மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x