Last Updated : 26 Nov, 2014 06:01 PM

 

Published : 26 Nov 2014 06:01 PM
Last Updated : 26 Nov 2014 06:01 PM

கலப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக சகோதரர்களால் சுடப்பட்ட பெண்

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிவயா கிராமத்தில் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட 25 வயது பெண் ஒருவரை அவரது சகோதரர்கள் துப்பாக்கியால் சுட்டது பரபரப்பாகியுள்ளது.

ஃபர்கனி என்ற இந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.

இவரது சகோதரர்களான நிஜமுதீன் மற்றும் பர்கான் ஆகியோர் நண்பன் ஷாகித் உடன் சென்று தங்கள் சகோதரியை அவரது வீட்டில் சந்திக்கச் சென்றனர்.

அப்போது அவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். அவர் தண்ணீர் கொண்டு வரும் போது அவர் மீது எதிர்பாராதவிதமாக திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதனையடுத்து ரத்தம் பீறிட அவர் சாய்ந்தார். மருத்துவமனையில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

4 ஆண்டுகளுக்கு முன்பாக ஃபர்கனி, ரவீந்திரா என்பவரை ஏகப்பட்ட எதிர்ப்புகளுடன் திருமணம் செய்து கொண்டார்.

தியோபந்தில் வாழ்ந்து வந்த இருவரும், 2 மாதங்களுக்கு முன்னதாகவே சிவயா கிராமத்திற்கு வந்தனர். தங்கள் இருவரது குடும்பத்தினரின் கோபதாபங்கள் அடங்கியிருக்கும் என்று இவர்கள் தவறாக எடைபோட்டனர்.

கணவர் ரவீந்திரா புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருவர் தலைமறைவாகியுள்ளனர். இதனால் பதட்டம் ஏற்பட்டுள்ள அந்த கிராமத்தில் கூடுதல் காவலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x