Published : 15 Nov 2014 12:00 PM
Last Updated : 15 Nov 2014 12:00 PM

ஈச்சம்பாடி, மணிமுக்தா அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

விவசாயத்திற்காக தர்மபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணையிலிருந்தும், விழுப்புரம் மாவட்டம், மணிமுக்தா நதி அணையிலிருந்து நாளை 16.11.2014 முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தர்மபுரி மாவட்டம், ஈச்சம்பாடி அணையிலிருந்து வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாய பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தர்மபுரி மாவட்டத்திலுள்ள, ஈச்சம்பாடி அணையிலிருந்து வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் 16.11.2014 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது. இதனால், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள 6,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.

விழுப்புரம் மாவட்டம், மணிமுக்தா நதி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய பாசன பரப்பு நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை வந்தது. அதனை ஏற்று, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மணிமுக்தா நதி அணையில் இருந்து பழைய மற்றும் புதிய பாசன பரப்பு நிலங்களுக்கு பாசனத்திற்கு 16.11.2014 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது, இதனால், விழுப்புரம் மாவட்டன், சங்கராபுரம் வட்டத்திலுள்ள 4,250 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x