Published : 25 Mar 2014 09:55 AM
Last Updated : 25 Mar 2014 09:55 AM

திமுக, அதிமுகவினால் காங்கிரஸுக்கு பாதிப்பில்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

தமிழகத்தில் காங்கிரஸை விமர்சிக்கும் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே ஊழலுக்கு பெயர் போனவைதான். எனவே, அவர்களது பிரச்சாரத்தால் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஈரோடு தொகுதி வேட்பாளர் பி.கோபியை கட்சி நிர்வாகிகளிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினார்.

பின் அவர் அளித்த பேட்டி: இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் ப.சிதம்பரம் இத்தேர்தலில் போட்டி யிட வில்லை. தேர்தலில் போட்டி யிட பயந்துவிட்டார், எனவே, அவர் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என பாஜக விமர்சனம் செய்வது சரியான அணுகுமுறை அல்ல.

வாக்காளர்களுக்குப் பணம்

ஊழல் பற்றி பேச பாஜக வுக்கு தகுதியில்லை. பாஜக முன்னாள் தேசியத் தலைவர் பங்காரு லட்சுமணன், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூ ரப்பா உள்ளிட்டோர் ஊழல் செய்தது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. ஆனால், எடியூரப் பாவுக்கு பாஜக தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுத்துள்ளது. ஊழல் புகாரில் சிக்கிய கல்மாடிக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்க வில்லை. தமிழகத் தில் திமுக அதிமுக.வினர் பிரச்சாரத்தை ஆரம்பித்ததோடு, வாக்களர் களுக்கு பணம் கொடுக்கவும் ஆரம்பித்து விட்டனர்.

ஜெயலலிதா அரசியலிலிருந்து விலகவேண்டும்

கடந்த ஆட்சியில் 2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டதற்கே, முதல்வர் பதவி விலக வேண்டும் என ஜெயலலிதா கூறினார். தற்போது 10 மணி நேர மின் தடை உள்ள நிலையில், ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து மட்டுமல்லாது அரசியலை விட்டே விலக வேண்டும். மு.க. அழகிரி அனைத்து கட்சித் தலை வர்களையும் சந்தித்து வருகி றார். வாய்ப்பு கிடைத்தால் ஞானதேசி கனையும் அவர் சந்திப்பார்.

இலங்கை தமிழர்களுக்காக அதிக அக்கறை கொண்டது காங்கிரஸ் கட்சி மட்டும்தான். இலங்கை தமிழர்கள் வாழும் பகுதியில் 2,500 கி.மீ. தூரத்துக்கு அகல ரயில் பாதை அமைக்கவும், 50,000 வீடுகள் கட்டித்தரவும் நடவடிக்கை எடுத்தது காங்கிரஸ் கட்சிதான்.

நாம் தமிழர் போன்ற கட்சிகள் தெருவீதிகளில் இலங்கை தமிழர்களுக்காக போராட் டம் நடத்துவதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளன. திருப்பூர் தொகுதியில் பிரசாரம் செய்ய சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வரவுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x