Published : 13 Apr 2014 11:48 am

Updated : 13 Apr 2014 11:48 am

 

Published : 13 Apr 2014 11:48 AM
Last Updated : 13 Apr 2014 11:48 AM

ஜய வருடப் பொதுபலன்கள் - 14.4.2014 முதல் 13.4.2015 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

14-4-2014-13-4-2015

புதிய தமிழ் வருடமான ஜய வருடம் 14.4.2014 திங்கட் கிழமை காலை மணி 7.35க்கு சுக்ல பட்சத்து சதுர்த்தசி திதி, ஹஸ்தம் நட்சத்திரம் 2-ம் பாதம், கன்னி ராசி மேஷ லக்னம், நவாம்சத்தில் விருச்சிக லக்னம் ரிஷப ராசியில், வியாகாதம் நாம யோகம் வணிசை நாம கரணத்தில், சித்தயோகம், நேத்திரம் ஜீவனம், நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் முதல் சாமத்தில் காகம் நடைப் பயிலும் நேரத்தில் சனி ஹோரையில் கௌரி பஞ்சாங்கப்படி விஷ வேளையில் வருடம் பிறக்கிறது.

ஜய வருஷத்திய வெண்பா பாடலின் படி

செம்மண் பூமி, தழைத்து நன்கு விளையும், மக்கள் மனம் மகிழ்வார்கள்.

சுக, போகங்கள் பெருகும். ஆளுபவர்களிடையே சினம் அதிகரிக்கும் என சித்தர் பெருமான் இடைக்காடர் கூறியுள்ளார்.மேஷம்

தொடங்கியதை முடிக்கும் வரை துவளாமல் உழைப்பவர்களே! சுக்ரன் லாப வீட்டில் வலுவடைந்திருக்கும் நேரத்தில் இந்த ஜய வருடம் பிறப்பதால் உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்து ஒரு படி உயரும். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். கடந்த வருடத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்கள், பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

ஜூன் 19-ம் தேதி முதல் குரு 4-ல் அமர்வதால் வீடு மாறுவீர்கள். சிலருக்கு ஊரே மாற வேண்டிய சூழ்நிலையும் உருவாகும். பிள்ளைகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். புதிய வாகனங்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். சிறுசிறு விபத்துகள் ஏற்படலாம். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வீடு கட்டும் வேலை தாமதமாகி முடியும். வரைபட அனுமதிப் பெறாமல் வீடு கட்ட வேண்டாம்.

உறவினர்களில் ஒருசிலர் விமர்சித்துப் பேசுவார்கள். “இவர் கூட இப்படித் தானா” என்று சிலரை நினைத்து ஆதங்கப்படுவீர்கள். ஜூலை

12-ம் தேதி முதல் 7-ம் வீட்டிலிருந்து ராகு விலகி 6-ல் மறைவதால் மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். ஷேர் மூலம் பணம் வரும். எதிர்பார்த்த விலைக்கு வீடு, மனை விற்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ஜூலை 12 முதல் கேது உங்கள் ராசியை விட்டு விலகுவதால் தலைச்சுற்றல், தூக்கமின்மை, படபடப்பு, தயக்கம் நீங்கும்.

முடிந்து வைத்திருந்த காணிக்கையை செலுத்தி பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாக முடியும். நவம்பர் 2-ம் தேதி முதல் கண்டகச் சனி விலகி அஷ்டமத்துச் சனி தொடங்குவதால் மறதியும், பெரிய நோய் இருப்பது போலவும் எதிர்மறை எண்ணங்களும் வந்து நீங்கும். பண விஷயத்தில் மற்றும் கல்யாண விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம்.

வியாபாரத்தில் கடந்த வருடத்தைவிட லாபம் அதிகரிக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் வேலைச்சுமையும், இடமாற்றமும் இருக்கும். சிலருக்கு அன்னிய நாட்டில் வேலை கிடைக்கும்.அதிர்ஷ்ட கிரகங்கள்: செவ்வாய் 60%, ராகு 100%

அதிர்ஷ்ட தெய்வம்: வக்ர காளி

தவிர்க்க வேண்டியவை: அநாவசியப் பேச்சு, வாகனத்தில் அதிக வேகம்

பெண்களுக்கு தங்க ஆபரணம் சேரும். வேலை கிடைக்கும்.

வாய்ப்புகள் அதிகம்: புண்ணிய ஸ்தலங்கள் செல்வதற்கு

மதிப்பெண்: 55/100ரிஷபம்

சுற்றுப்புறச் சூழலுக்கு கட்டுப்படாமல் தனக்கென தனிப்பாதை யில் செல்பவர்களே! சனியும், ராகுவும் 6-ம் வீட்டில் வலுவடைந் திருக்கும் நேரத்தில் இந்த ஜய ஆண்டு பிறப்பதால் அடிப்படை வசதிகள் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

விலகிச் சென்ற சொந்த - பந்தங்கள் வலிய வந்துப் பேசுவார்கள். இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்சினை விரைந்து முடியும். ஜூன் 18-ம் தேதி வரை குரு 2-ல் நிற்பதால் பணப்புழக்கம் எதிர்பார்த்தபடி இருக்கும். ஜூன் 19 முதல் குரு 3-ல் மறைவதால் தவிர்க்க முடியாத செலவுகளும், பயணங்களும் அதிகமாகும். சகோதர வகையில் அலைச்சலும், செலவுகளும் இருக்கும். சில காரியங்களை முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் போகும்.

ஜூலை 11 வரை ராகு 6-ல் நிற்பதால் வாய்தா, வாய்தா என்று தள்ளிப் போன வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும். ஷேர் மூலம் ஆதாயம் உண்டு. ஆனால் ஜூலை 12-ம் தேதி முதல் ராகு 5-ல் நுழைவதால் நெருங்கிய உறவினர்களின் சிலர் ஒதுங்குவார்கள். பாகப் பிரிவினை தாமதமாக முடியும். கர்ப்பிணிப் பெண்கள் எளிதில் செரிமானமாகும் உணவுகளை உட்கொள்வது நல்லது. கேது ஜூலை 12-ம் தேதி முதல் லாப வீட்டில் நுழைவதால் குடும்ப வருமானம் உயரும். இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

நவம்பர் 1-ம் தேதி வரை சனி வலுத்து 6-ல் நிற்பதால் சவாலான காரியங்களைக்கூட எளிதாக முடிப்பீர்கள். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் பயனடைவீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். ப்ளான் அப்ரூவலாகி வரும். நிரந்த வருமானத்திற்கு ஏதேனும் வழி செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள். வியாபாரத்தில் அக்டோபர் மாதம் வரை பற்று வரவு உயரும். நவம்பர் மாதத்திலிருந்து சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்வது நல்லது. உத்யோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கும். நவம்பர் மாதத்திலிருந்து வேலைச்சுமை அதிகமாகும்.அதிர்ஷ்ட கிரகங்கள்: புதன் 65%, கேது 90%

அதிர்ஷ்ட தெய்வம்: சிவன்

தவிர்க்க வேண்டியவை: இரக்கப்பட்டு ஏமாறுதல், ஆடம்பரச் செலவு

பெண்களுக்கு குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும், வாகனம் வாங்குவீர்கள்.

வாய்ப்புகள் அதிகம்: திருமணம், அயல்நாட்டுப் பயணம்.

மதிப்பெண்: ஏப்ரல் 14 முதல் அக்டோபர் வரை 85/100, நவம்பர் முதல் ஏப்ரல் 13 வரை 60/100.மிதுனம்

மன்னிக்கும் குணமும், மற்றவர்களிடம் உதவி கேளாத மனஉறுதியும் உள்ளவர்களே! கடந்த விஜய வருடம் உங்களை நாலா விதத்திலும் பாடாய்படுத்தியது. எதிலும் நிம்மதி இல்லாமலும் போனது. பணப்பற்றாக்குறையால் பல நேரங்களில் செலவுகளை சமாளிக்க முடியாமல் கையைப் பிசைந்துகொண்டு அலைந்தீர்களே! உங்கள் யோகாதிபதி சுக்ரன் பணபலம் தரும் வீடான ஒன்பதாம் வீட்டில் நிற்கும் போது இந்த வருடம் பிறப்பதால் உங்கள் கை ஓங்கும்.

குடும்ப வருமானம் உயரும். எதிர்பார்த்த தொகைகளும் கைக்கு வரும். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் கூடி வரும். நீண்ட நாட்களாக குழந்தை வரம் வேண்டியவர்களுக்கு இந்த வருடம் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். ஜூன் 19-ல் இருந்து பெரிய நோய்கள் இருப்பது போன்ற மனபீதியெல்லாம் விலகும். எதைத் தொடங்குவதாக இருந்தாலும் ஒருவித தயக்கம், தடுமாற்றம் இருந்ததே அது விலகும். ஜூலை 12 முதல் ராகு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டிலும், கேது 10-ம் வீட்டிலும் அமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும்.

நாடு, நகரம் வளர்ந்தாலும், நாகரிகம் அதிகரித்திருந்தாலும் உங்களைச் சுற்றியிருக்கும் உறவினர்களில் ஒருசிலர் இன்னமும் மாறவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். சக்திக்கு மீறி உதவினாலும் ஒருசிலர் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்வதை நினைத்துப் புலம்புவீர்கள். கடந்த இரண்டரை ஆண்டுகளாக உங்கள் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உட்கார்ந்து உங்களின் நிம்மதியையும், தூக்கத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கும் சனி, நவம்பர் 2-ம் தேதி முதல் ஆறாம் வீட்டில் அமர்கிறார். அதுமுதல் சாதிக்கத் தொடங்குவீர்கள். பணம் சேமிக்கும் அளவிற்கு வரத் தொடங்கும். தலைமுறை தாண்டிய பகையெல்லாம் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும்.

வீடு, மனை அமையும். அந்தஸ்தும் உயரும். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களால் லாபம் அதிகமாகும். கடனை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இதுவரை சந்தித்த அவமானங்கள், இழப்புகளுக்குப் பரிசாக பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. சிலருக்கு நல்ல வேலையும் கிடைக்கும்.அதிர்ஷ்ட கிரகங்கள்: நவம்பர் முதல் சனி 95%, புதன் 60%

அதிர்ஷ்ட தெய்வம்: பார்த்தசாரதி பெருமாள்

தவிர்க்க வேண்டியவை: கார உணவுகள், பெற்றோருடன் விவாதங்கள்.

பெண்களுக்கு நவம்பரில் ஆபரணம் சேரும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும்.

வாய்ப்புகள் அதிகம்: புது வேலை, வீடு கட்ட.

மதிப்பெண்: அக்டோபர் வரை 40/100 நவம்பர் முதல் 72/100கடகம்

ஊர், உலகத்தையெல்லாம் அறிந்து வைத்திருக்கும் நீங்கள், உடனிருப்பவர்களை கணிக்காமல் விட்டுவிடுவீர்கள். உங்கள் ராசிநாதன் சந்திரன், யோகாதிபதி செவ்வாயுடன் சேர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஜய வருடம் பிறப்பதால் கடந்த வருடத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து கிடைக்கும். சகோதர வகையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வீடு, மனை அமையும். வாகனத்தையும் மாற்றுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

மகனுக்கும் தள்ளிப் போன விஷயங்களெல்லாம் கூடி வரும். ஜூன் 19-ம் தேதி முதல் குரு உங்கள் ராசிக்குள் நுழைவதால் இனம் தெரியாத மனக்கவலைகள் வந்து செல்லும். சளித் தொந்தரவால் மூச்சுத் திணறலும், வாயுக் கோளாறால் நெஞ்சு வலியும் வரக்கூடும். கணவன்,மனைவிக்குள் உப்பு பொறாத விஷயத்திற்கெல்லாம் சலசலப்பு வரும். உங்கள் ராசிக்கு சுகஸ்தானமான 4-ம் வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உட்கார்ந்து பாடாய்படுத்தும் ராகு, ஜூலை 12-ம் தேதி முதல் 3-ல் அமர்வதால் பிரச்சினைகளை சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க வழிபிறக்கும்.

பழைய மனை அல்லது வீட்டை நல்ல விலைக்கு விற்று நெருக்கடியிலிருந்து வெளிவருவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். என்றாலும் நவம்பர் 1-ம் தேதி வரை அர்த்தாஷ்டமச் சனி இருப்பதால் அதுவரை தாயாருடன் மனக்கசப்புகள் இருக்கும். உறவினர்களில் ஒருசிலர் உங்களைத் தவறாகப் புரிந்து கொள்வார்கள். ஆனால் நவம்பர் 2 முதல் அர்த்தாஷ்டமச் சனி விலகுவதால் அதுமுதல் வேலைச்சுமை குறையும். மூட்டு, முதுகு வலி நீங்கும். கேது ஜூலை 12 முதல் 9-ம் இடத்தில் அமர்வதால் செலவினங்களைக் குறைக்க முடியாமல் விழி பிதுங்குவீர்கள். தந்தையாருக்கு அலைச்சல், சுகவீனங்கள் இருக்கும்.

வியாபாரத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஜய வருடத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டிகளைச் சமாளிக்கத் தயாராவீர்கள். வேலையாட்கள் தொடர்பான பிரச்னை டிசம்பர் மாதம் முதல் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் மனஓட்டத்தை அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். இழந்த சலுகைகளை பெற்று நிம்மதியடைவீர்கள்.அதிர்ஷ்ட கிரகங்கள்: செவ்வாய் 60%, ஜூலை முதல் ராகு 85%

அதிர்ஷ்ட தெய்வம்: காமாட்சி அம்மன்

தவிர்க்க வேண்டியவை: முன்கோபம், நொறுக்குத் தீனி

பெண்களுக்கு தன்னம்பிக்கை கூடும். பதவி, வேலை கிடைக்கும்.

வாய்ப்புகள் அதிகம்: புது வாகனம் வாங்க, வீடு மாற.

மதிப்பெண்: அக்டோபர் வரை 37/100 நவம்பர் முதல் 65/100சிம்மம்

மனம் திறந்து பேசுவதால் மதிக்கப்படுபவர்களே! உங்களுக்கு இரண்டாவது ராசியில் இந்த ஜய வருடம் பிறப்பதால் வருமானம் உயரும். அரை குறையாக நின்று போன வேலைகள் உடனே முடியும். மகளுக்குத் தள்ளிப் போன திருமணம் தடபுடலாக நடக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு அமையும். அரசு விஷயங்கள் சாதகமாகும். தள்ளிப் போய்க் கொண்டிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

அதிகார மையத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சுக்கிரன் சாதகமாக இருக்கும் போது இந்த வருடம் பிறப்பதால் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சகோதர வகையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். வைகாசி, ஆனி மாதங்களில் திடீர் பணவரவும், செல்வாக்கும் கூடும். வீடு கட்ட லோன் கிடைக்கும். ஜூன் 19 முதல் குரு 12-ம் இடத்தில் மறைவதால் திடீர் பயணங்களும், தவிர்க்க முடியாத செலவுகளும் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்யும் அளவு பணம் வரும்.

நல்ல காற்றோட்டம் உள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். புது வேலை அமையும். ஜூலை 11 வரை ராகு சாதகமாக இருப்பதால் வேற்றுமதத்தைச் சார்ந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். ஜூலை 12 முதல் ராகு 2-ம் இடத்தில் அமர்வதால் அந்தரங்க விஷயங்களை வெளியிடாதீர்கள். வாக்குறுதி களும் தர வேண்டாம். ஜூலை 12 முதல் கேது 8-ம் இடத்தில் மறைவதால் உணர்ச்சிவேகத்தில் பெரிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு உத்தரவாதக் கையொப்பமிட வேண்டாம். நவம்பர் 1-ம் தேதி முதல் சனி 3-ல் நிற்பதால் சவாலான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள்.

ஷேர் மூலம் பணம் வரும். செல்வாக்குக் கூடும் ஆனால் நவம்பர் 2-ம் தேதி முதல் அர்த்தாஷ்டமச் சனி தொடங்குவதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு அதிகமாகும். வியாபாரத்தில் தொடர்ந்து லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். வருடத்தின் மத்தியப் பகுதியிலிருந்து உங்கள் நடவடிக்கைகள் சிலரால் கண்காணிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.அதிர்ஷ்ட கிரகங்கள்: குரு 60%, செவ்வாய் 65%

அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீ தட்சிணாமூர்த்தி

தவிர்க்க வேண்டியவை: திடீர் முடிவுகள், அதீத தன்னம்பிக்கை

பெண்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும். நீண்ட நாள் கனவு நனவாகும்.

வாய்ப்புகள் அதிகம்: சொத்து வாங்க, சொந்த - பந்தங்களுடன் சேர

மதிப்பெண்: அக்டோபர் வரை 87/100 நவம்பர் முதல் 55/100கன்னி

இரக்கக் குணம் அதிகமாகும் போதெல்லாம் ஏமாறுபவர்களே! உங்கள் ராசியிலேயே இந்த வருடம் பிறப்பதால் வருடத்தின் முற்பகுதியில் உடல்நிலை பாதிக்கும். பணப்பற்றாக்குறையும் இருக்கும். உங்கள் ராசிநாதன் புதன் நீசமாகி நிற்பதால் வருங்காலம் பற்றிய சின்னச் சின்ன கவலைகள் வந்துப் போகும். விஜய வருடத்தில் ஏற்பட்ட வேதனைகள், அவமானங்கள் யாவுமே ஜூன் 19 முதல் குரு, லாப வீட்டில் நுழைவதால் கொஞ்சம் கொஞ்சமாக விலகும்.

பணம் வரத் தொடங்கும். எந்த நேரத்தில் எந்தப் பிரச்னை வருமோ என்ற அச்சம் நீங்கும். பிளவுப்பட்ட குடும்பம் ஒன்று சேரும். வேலை கிடைக்காமல் போனவர்களுக்கு வேலை கிடைக்கும். குழந்தை பாக்யம் உண்டு. பிள்ளைகளிடமிருக்கும் பொறுப்பற்ற போக்கு மாறும். மகனுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும். ஜூலை 12 முதல் ராகு உங்கள் ராசிக்குள் வருவதாலும், கேது உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் அமர்வதாலும் ஒவ்வாமை மற்றும் நோய்த்தொற்று வந்து போகும்.

கணவன்-மனைவிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். வீண் சந்தேகத்தின் அடிப்படையில் விவாதம் செய்து கொண்டிருக்க வேண்டாம். நவம்பர் 2-ம் தேதி முதல் ஏழரைச் சனி முழுமையாக விலகுவதால் சிக்கல்கள், வழக்குகள், மனஉளைச்சல்களிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம், அழகு அதுமுதல் கூடும். ஏமாந்து போன தொகை கைக்கு வரும்.

எதற்கெடுத்தாலும் கோபப்பட்டீர்களே! அந்த முன்கோபம் நீங்கும். நவம்பர் 1-ம் தேதி வரை பாதச்சனி தொடர்வதால் வீண்பழி, கடன் பிரச்சினை, கை, கால் வலி அதிகரிக்கும். ஆனால் 2-ம் தேதி முதல் மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். வீடு, மனை வாங்குவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். சிலர் புதுத்தொழில் தொடங்குவீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் வருடத்தின் பிற்பகுதியில் லாபம் அதிகரிக்கும்.

நல்ல இடத்தில் கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் நீண்டகாலமாக தள்ளிப்போன பதவி உயர்வு, சம்பள உயர்வு வருடத்தின் மத்தியப் பகுதியிலிருந்து கிடைக்கும்.அதிர்ஷ்ட கிரகங்கள்: சுக்ரன் 95% ஜூன் 19 முதல் குரு 90% நவம்பர் 2 முதல் சனி 100%

அதிர்ஷ்ட தெய்வம்: முருகன்

தவிர்க்க வேண்டியவை: பழசை சொல்லி முணுமுணுத்தல்

பெண்களுக்கு திருமணம் கூடி வரும். வசதி, வாய்ப்புகள் பெருகும்.

வாய்ப்புகள் அதிகம்: வீடு, வாகனம் வாங்குவதற்கு.

மதிப்பெண்: நவம்பர் முதல் 85/100

வேங்கடசுப்பிரமணியன்ஜய வருடம்பொதுப் பலன்கள்வருடப் பலன்கள்

You May Like

More From This Category

More From this Author