Published : 19 Feb 2015 11:16 AM
Last Updated : 19 Feb 2015 11:16 AM

இவரைத் தெரியுமா?- கிஷோர் ஜெயராமன்

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளுக்கு நிர்வாக இயக்குநர்.

ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து அங்கு 23 ஆண்டுகள் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

ஜிஇ எனர்ஜி மற்றும் ஜிஇ கேபிடல் நிறுவனத்தில் 2011-ம் ஆண்டு வரை தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார்.

இந்தோ-டெக் டிரான்ஸ்பார்மர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சில காலம் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

2012-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குராக பொறுப்பு வகிக்கும் இவர் சென்னையில் பிறந்தவர்

பெங்களூர் ஐஐடி-யில் இளங்கலைப் பட்டமும், ஒகலஹோமா பல்கலைக் கழகத்தில் பொறியியலில் முதுகலைப் பட்டமும், நிர்வாகவியலில் ஜார்ஜியா பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

விமானத் துறையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் விமானம் மற்றும் எரிசக்தித் துறை நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x