Published : 04 Jan 2015 11:55 am

Updated : 04 Jan 2015 11:55 am

 

Published : 04 Jan 2015 11:55 AM
Last Updated : 04 Jan 2015 11:55 AM

மிலாடி நபி: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

மிலாடி நபியையொட்டி இஸ்லா மிய மக்களுக்கு தமிழக ஆளுநர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர் கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கே.ரோசய்யா (தமிழக ஆளுநர்)

மிலாடி நபி புனிதத் திருநாளில் உலகெங்கும் வாழும் இஸ்லா மிய மக்களுக்கு எனது நல்வாழ்த்து களை தெரிவித்துக் கொள்கிறேன். நபிகள் நாயகத்தின் வாழ்க்கை நம் எல்லோருக்குமே ஒரு பாடமா கும். நாம் அனைவரும் அவரது கொள்கைகளை பின்பற்றி ஒற்றுமை, அமைதி, சமூக நல்லி ணக்கம் உருவாகபாடுபடுவோம்.

கருணாநிதி (திமுக தலைவர்)

நபிகள் நாயகம் பிறந்த நாளை மிலாடி நபி நாளாக இஸ்லாமிய மக்கள் மகிழ்ச்சியோடும் மிகுந்த எழுச்சியோடும் கொண்டாடு கின்றனர். மிலாடி நபி நாளை நான் முதன்முதலாக முதலமைச் சராகப் பொறுப்பேற்ற 1969-ம் ஆண்டில் விடுமுறை நாளாக அறிவித்தேன். இடையில் அது ரத்து செய்யப்பட்டது. 2006-ல் திமுக ஆட்சியின் போது மிலாடி நபி திருநாள் மீண்டும் விடுமுறை நாளாக அறிவிக் கப்பட்டது. இஸ்லாமிய மக்களின் நலன் காத்து வரும் திமுக சார்பில் எனது உளமார்ந்த மிலாடி நபி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்)

இல்லாதவர்களுக்கு, இருப்ப வர்கள் உதவி செய்யவேண்டும் என்பது இஸ்லாம் மார்க்கத்தின் உயரிய நோக்கமாகும். அதன் வழியில் நாட்டில் அன்பு, அமைதி, சமாதானம், மனிதநேயம் ஆகிய நற்பண்புகள் அனைவரின் உள்ளங்களிலும் மலர்ந்திட வேண்டுமென இந்நன்னாளில் வாழ்த்துகிறேன். எனது இதய மார்ந்த மிலாடி நபி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் (தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்)

மூடக்கொள்கைகளில் மூழ்கியிருந்த சமூகத்தின் மீது நம்பிக்கை விடியலை பரவ விட்டவர் நபிகள் நாயகம். அவரை இந்நாளில் நினைவு கூர்ந்து இஸ்லாமிய பெரு மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் எனது மிலாடி நபி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்)

நபிகள் நாயகத்தின் போதனை களை உண்மையாக பின்பற் றுவதே அவருக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும். எனவே, அவர் போதித்த அன்பு, அமைதி, சமாதானம், சமய நல்லிணக்கம், ஆகியவற்றை கடைபிடிக்க அவரது பிறந்தநாளான இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்)

இந்திய உபகண்டத்தில் அனைத்து மதத்தினருக்கும் சமமான பாதுகாப்பு வழங்கிடும் மதச் சார்பின்மையை, ஜனநாயகத் தின் அடிப்படைக் கோட்பாட்டைப் பாதுகாக்க இந்த நன்னாளில் உறுதி ஏற்போம்.

டாக்டர் ந.சேதுராமன் (அ.இ.மூவேந்தர் முன்னணி)

இன்றைய தினத்தில் பொறுமை, தூய்மை, தியாகம் போன்ற வற்றை அனைத்து மதத்தவரும் மதிக்க வேண்டும். வன்முறைக்கு வழிவகுக்கும் தீவிரவாதத்துக்கு எதிராக போராட நாம் உறுதியேற்போம்.

ஜி.கே. வாசன் (தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர்)

பல்வேறு இனம், மதம், மொழி என வேறுபாடுகள் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது நமது கலாச்சாரம். இந்தியாவில் சமத்துவம் மலரவும், சகோதரத்துவம் தொடரவும், சாதி, சமய, பேதமற்ற மனித நேயம் மிக்க சமுதாயம் நிலைக்கவும் இத்திருநாளில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து சபதம் ஏற்போம்.

பாரிவேந்தர் (ஐஜக நிறுவனர்)

வன்முறையை தவிர்த்து வளமான இந்தியாவை உருவாக்கு வதே இந்திய குடிமக்கள் அனை வருக்குமான செயல்திட்டமாகும். இதனை நிறைவேற்ற அண்ணல் நபிகள் நாயகத்தின் போதனைகளை நினைவு கூர்ந்து நெஞ்சத்தில் இருத்தி செயல்படுவோம்.

தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்)

தற்போதைய இந்திய அரசியல் சூழல், இஸ்லாமியர் களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத் தக் கூடியதாக இருக்கிறது. இதனை அனைத்து ஜனநாயக சக்திகளுடன் இணைந்து நபிகள் நாயகம் போதித்த சமாதான நல்லிணக்க வழியில் நின்று எதிர்கொள்வோம்.

மிலாடி நபிதலைவர்கள் வாழ்த்துஅரசியல் கட்சித் தலைவர்கள்

You May Like

More From This Category

More From this Author