Published : 17 Mar 2015 09:32 AM
Last Updated : 17 Mar 2015 09:32 AM

பொதுப்பணித் துறை தலைமை வளாகத்தில் மூடிக்கிடக்கும் அருங்காட்சியகம், நூலகம்

சென்னை கடற்கரைச் சாலையில் பொதுப்பணித் துறை தலைமை அலுவலகத்தில் கட்டப்பட்ட 150-ம் ஆண்டு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் நீண்ட நாட்களாக மூடிக்கிடக்கிறது. இதனால் இங்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

தமிழக பொதுப்பணித் துறையின் 150-ம் ஆண்டு நிறைவு விழா 2011-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. பாரம்பரியமிக்க இத்துறை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏராளமான கட்டிடங்களைக் கட்டியுள் ளது. அதை நினைவுகூரும் வகையி லும், பொறியியல் மாணவர்கள், ஆர்வலர்கள் போன்றோர் தமிழக பொதுப்பணித் துறையின் பெருமை களை அறிந்துகொள்ளவும் அருங் காட்சியகம் மற்றும் நூலகம் கடந்த 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

சென்னை கடற்கரை சாலையில் பொதுப்பணித் துறை தலைமையக வளாகத்தின் பின்புறத்திலும், சேப்பாக்கம் பறக்கும் ரயில் நிலையத்துக்கு எதிரே எழிலகத்தின் பின்புறத்திலும் இது அமைந்துள்ளது. வட்டவடிவில் உள்ள இந்த 2 மாடி கட்டிடத்தில், சிவில் இன்ஜினீயரிங் மாணவர்களுக்குப் பயனுள்ள தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

அருங்காட்சியக நுழைவு வாயிலில், முல்லை பெரியாறு அணையைக் கட்டிய இங்கிலாந்து பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குயிக் உருவப்படம் வைக்கப்பட்டுள் ளது. தமிழகத்தின் முக்கிய நினை விடங்கள், ஆசியாவின் மிகப் பெரிய பல்நோக்கு மருத்துவமனை போன்ற பெரிய கட்டிடங்கள் என நூற்றுக்கணக்கான புகைப்படங் கள் தரைதளத்தில் காட்சிக்கு வைக் கப்பட்டுள்ளன.

இதுதவிர, சிவில் இன்ஜினீயரிங் மாணவர்களுக்குப் பயன்படும் புத்தகங்களுடன் கூடிய தொழில்நுட்ப நூலகமும் செயல்படுகிறது. முதல் தளத்தில், தமிழகத்தில் உள்ள அணைகளின் புகைப்படங்கள், அவற்றைப் பற் றிய முழு விவரங்கள் எழுதிவைக் கப்பட்டுள்ளன.

இத்தகைய சிறப்பு வாய்ந்த அருங் காட்சியகம், நூலகம் பல நாட்களாக மூடிக்கிடக்கிறது. இதனால், மாண வர்கள், பொதுமக்கள் ஏமாற்றத்து டன் திரும்பிச் செல்கின்றனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி எஸ்.பாக்கியராஜ் என்ற கூறும்போது, ‘‘பொதுப்பணித் துறை வளாகத் தில் அருங்காட்சியகம், நூலகம் இருப்பதே பலருக்கும் தெரிய வில்லை. தேடிக் கண்டுபிடிக்க சிரமமாக இருந்தது. வந்து பார்த்தால் மூடிக்கிடக்கிறது. இதை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதோடு, வளாகத்தின் வாயிலில் பெயர்ப் பலகை வைத்தால் வசதி யாக இருக்கும். காலை முதல் மாலை வரை திறந்துவைக்க ஏற்பாடு செய்யவேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளைக் கேட்டபோது, ‘‘அருங்காட்சியகத்தை திறந்து மூட ஒரு ஊழியரை நியமித்துள் ளோம். அவர் முறையாகச் செய்கி றாரா என்று கண்காணிக்கப்படும். அருங்காட்சியகம், நூலகத்தை திறந்துவைக்க கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x