Published : 27 Feb 2015 08:52 AM
Last Updated : 27 Feb 2015 08:52 AM

சாதாரண மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்றாத பட்ஜெட்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கருத்து

சாதாரண மக்களுக்கு கூடுதல் சுமைகளை ஏற்படுத்தாததால் மொத்தத்தில் ரயில்வே பட்ஜெட்டை வரவேற்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

ரயில்வே பட்ஜெட் குறித்து ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எந்த வகையிலும் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாதது மகிழ்ச்சி அளிக்கிறது. திறமையான நடவடிக்கை மூலம் ரயில்வே துறையை மேம்படுத்த திட்டமிட்டி ருப்பது வரவேற்கத்தக்கது. பயணி கள், குறிப்பாக பெண் பயணிகள் பாதுகாப்பு, ரயில்கள் மற்றும் ரயில் நிலையத் தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக் கப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.

மாநிலங்களுக்கான மின்ஒதுக் கீட்டில் இருந்து ரயில்வே பயன் பாட்டுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் பெற திட்டமிடப்பட்டுள் ளது. ஏற்கெனவே மின்நுகர் வோருக்கு அடிப்படை மின்வசதி அளிக்க சிரமப்படும் மாநிலங் களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பிறகே இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிதாக திட்டமிடப்பட்டுள்ள வைர நாற்கர அதிவேக ரயில் இணைப்பு திட்டத்தின் வழித்தடங் களில் சென்னைக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும்.

புதிய ரயில் திட்டங்கள், முன்பு அறிவிக்கப்பட்டு நிதி இல்லாததால் செயல்படுத்தப்படாமல் இருக்கும் திட்டங்கள் குறித்து எதுவும் கூறப் படவில்லை. தமிழகத்தில் மட்டும் 22 ரயில் திட்டங்கள் இதுபோன்று நிதி ஒதுக்கீடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. புதிய ரயில்கள் குறித்து அறிவிக்கும்போது, இந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன்.

தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம்-2023ல் இடம்பெற்றுள்ள சென்னை - தூத்துக்குடி சரக்குப் போக்குவரத்து பாதை, சென்னை மதுரை - கன்னியாகுமரி அதிவேக பயணிகள் இணைப்பு பாதை, கோவை - மதுரை அதிவேக பயணி கள் இணைப்பு பாதை ஆகிய 3 ரயில்வே திட்டங்களை தமிழக அரசுடன் இணைந்து ரயில்வே துறை செயல்படுத்தலாம். பறக்கும் ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில் போக்குவரத்தை இணைக்கும் திட்டம் குறித்து விரைவில் பரிசீலிக்கப்படும் என நம்புகிறேன்.

தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்குமாறு ரயில்வே துறைக்கு ஏற்கெனவே வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. திட்டங்களை விரைந்து முடிக்கத் தேவையான நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

வழக்கமாக ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் குறித்த அறிவிப்புகள் மிகவும் எதிர்பார்க் கப்படும். அதுபோன்ற அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக் கிறது. இந்த பட்ஜெட் குறிப்பிடத் தக்க வகையில் நம்பிக்கைகளை யும், விருப்பங்களையும் உண்டாக்கி யிருக்கிறது. சாதாரண மக்களுக்கு கூடுதல் சுமைகளை ஏற்படுத்தாத தால் மொத்தத்தில் இந்த ரயில்வே பட்ஜெட்டை வரவேற்கிறோம்.இவ் வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x