Published : 14 Jan 2015 13:17 pm

Updated : 14 Jan 2015 15:31 pm

 

Published : 14 Jan 2015 01:17 PM
Last Updated : 14 Jan 2015 03:31 PM

உலக முதலீட்டாளர் மாநாடு: சாதிக்க வேண்டிய நெருக்கடியில் தமிழகம்

தமிழகத்தில் மே மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் தமிழக அரசு உள்ளது. இதற்காக 5 நாடுகளின் ஒத்துழைப்பைக் கேட்டு கடிதம் எழுதியுள்ள நிலையில், இந்நிகழ்வுக்காக ஆதரவு திரட்டுவதற்காக இம்மாத இறுதியில் பல்வேறு நாடுகளுக்கு தமிழக குழுவினர் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

குறைந்து வரும் முதலீடுகள்

நாட்டில் மிக வளர்ந்த மாநிலங் களில் ஒன்றாக விளங்கிவரும் தமிழகம், சமீபகாலமாக குறைந்து வரும் தொழில் முதலீட்டை அதி கரிக்கவும், முதலீட்டுக்கு உகந்த இடமாக பறைசாற்றிக்கொள்ளவும், சென்னையில் வரும் மே மாதத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை நடத்த ஏற்பாடுகளைச் செய்துவருகிறது.

இந்த மாநாட்டினை முதல் முறையாக நடத்தவிருப்பதால் அதனை முழு வெற்றியாக்க பல் வேறு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுவருகின்றன. முன்னதாக, கடந்த அக்டோபரில் இந்த மாநாட்டினை நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் அது மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இலக்கை எட்ட உதவுமா?

தமிழகத்தில் தொழில் முதலீட் டினை அதிகரிக்கும் நோக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட ‘தொலைநோக்குத் திட்டம்-2023’-ன் அடிப்படையில் அதன் வாயிலாக பல லட்சம் கோடி முதலீட்டினை ஈர்க்க இலக்கு நிர்ணயித்திருந்தார். ஆனால், எதிர் பார்த்ததைவிட முதலீடு குறை வாகவே தமிழகத்துக்கு வந்துள் ளன. அதனால், இந்த முதலீட்டாளர் மாநாடு சிறப்பாக நடைபெற்று முதலீட்டாளர்களின் கவனத்தினை ஈர்த்தால், மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று தொழில்துறையினர் கருதுகின்றனர். இதற்காக தமிழக அரசு தனது பட்ஜெட்டில் ரூ.100 கோடியை ஒதுக்கியுள்ளது.

நோக்கியா, பாக்ஸ்கான்

இதனை அறிவித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தற்போது பதவியில் இல்லாத நிலையிலும், மின்வெட்டு பிரச்சினை நிலவி வரும் சூழலிலும், நோக்கியா இந்தியா மற்றும் பாக்ஸ்கான் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள பின்னணியிலும் இந்த மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது தமிழகத்துக்கு ஒரு சவாலாகவே இருக்கும். குஜராத், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் முதலீட் டாளர்கள் மாநாட்டினை பலமுறை நடத்தியுள்ள நிலையில், இம்மாநாட் டினை முதல்முறையாக நாம் நடத்தவிருக்கிறோம். அதனால் இது ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும் என்று இம்மாநாட்டுக் கான ஏற்பாடுகளைக் கவனித்து வரும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது குறித்து தமிழக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது.

தமிழக அரசு சார்பில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு முதல்முறையாக நடக்கிறது. ஆனால், குஜராத் 7 முறையும், கர்நாடகம் மூன்றாண்டுகளாகவும், மத்திய பிரதேசம் பல ஆண்டுகளாகவும் வெற்றிகரமாக நடத்திவருகின்றன. குஜராத்தில் ஞாயிறன்று தொடங்கிய உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு (வைப்ரன்ட் குஜராத்), அமெரிக்க அமைச்சர் ஜான் கெர்ரி, பூடான் பிரதமர் போன்ற பிரபலங்கள் வருகை தந்து அசத்தியுள்ளனர்.

இதுபோன்ற பின்னணியில், நாம் முதல் முறையாக உலக முதலீட்டாளர் மாநாட்டினை நடத்த விருப்பது நமக்குப் புதிய அனுபவ மாக இருப்பது மட்டுமின்றி, அந்த மாநிலங்களுக்கு நிகராகவோ, அவர்களை விடச் சிறப்பாகவோ நடத்திக் காட்டவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா கலந்துகொள்வாரா என்று உறுதி யாக தெரியாத நிலையில், இதனை முன்னெடுத்துச் செல்வது சற்று சிரமம்தான் என்பதை உணர்ந்திருக் கிறோம். எனினும், மாநாட்டினை வெற்றிகரமாக நடத்துவதற்கு விரிவான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்த அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் மற்றும் ஜப்பான் பிரதிநிதிகள் முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்தபோது, இந்த மாநாட்டில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, இந்த மாநாட்டை, தமிழகத்துடன் இணைந்து நடத்தக் கோரி அமெ ரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், தென்கொரியா மற்றும் இங்கிலாந்து ஆகிய ஐந்து நாடுகளுக்குக் கடிதம் எழுதியுள்ளோம். ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் பல்வேறு தரப்பினர்,தமிழகத்தை தொடர்பு கொண்டுவருகின்றனர். தமிழகம் நடத்தும் மாநாடு தொடர் பாகவும், இங்கு முதலீட்டுக்கு வழங்கப்படும் சலுகைகள் பற்றியும் தகவல் கோரிவருகின்றனர்.

இதுதவிர இந்த மாத இறுதி யில் இருந்து தொடர்ந்து சில வாரங் களுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த குழுவினர் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, நமது மாநாட்டுக்கு ஆதரவு கோருவார் கள். அதில், தமிழக அமைச்சர் கள், உயரதிகாரிகள், தொழில்துறை யினர் போன்றோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் (ரோட் ஷோ) நடத்தப்படும். தமிழகத்தில் சுமார் 550 நிறுவனங்களைக் கொண்டுள்ள ஜப்பான் உள்ளிட்ட சில குறிப்பிட்ட நாடுகளில் இந்த ரோட் ஷோ நடத்தப்படும். அந்நிகழ்ச்சிகளில் தமிழகத்தில் நிலவும் தொழில் முதலீட்டுக்கு உகந்த சூழல் குறித்தும், திறம்மிக்க தொழிலாளர்களின் வளம் குறி்த்தும், இங்கு முதலீடு செய்ய விரும்பும் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் குறித்தும் விளக்கப்படும்.

மின்பற்றாக்குறை

மின்பற்றாக்குறை முக்கிய பிரச்சினை என்பதால் அதனைப் போக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்படும்.இந்த மாநாட்டில் பல நூறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். அதனால் ரூ.ஒரு லட்சம் கோடி அளவுக்கு புதிய முதலீடுகள் வரும் என்று உறுதியாக நம்புகிறோம். இந்திய தொழிலகக் கூட்டமைப்புடனும், இதற்கான ஒத்துழைப்பினைக் கோரியுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


உலக முதலீட்டாளர் மாநாடுதமிழக அரசுக்கு நிர்ப்பந்தம்தமிழக குழு பயணம்

You May Like

More From This Category

More From this Author