Published : 25 Jan 2015 12:55 pm

Updated : 25 Jan 2015 13:14 pm

 

Published : 25 Jan 2015 12:55 PM
Last Updated : 25 Jan 2015 01:14 PM

கதை சொல்லும் செய்தி!

நமது பிசினஸ், வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என அனைத்திலும், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தினமும் நாம் முடி வெடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அப்படி எடுக்கப்படும் முடிவுகள் எல் லாம் நல்ல முடிவுகளா? அவை அனைத்தும் வெற்றியை மட்டுமே தருகின்றனவா? ஒரு சில நொடிகளில் எடுக்கப்படும் முடிவுகள், ஒரு பெரும் மாற்றத்தினை (நல்லதோ அல்லது கெட்டதோ) ஏற்படுத்திவிடுகின்றன. முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள் வதற்கான கருத்துகளை எளிய முறையில் சுவாரஸ்யமான கதைகள் மற்றும் உதாரணங்களின் மூலம் கற்பிக்க முடியும் என்று இந்தப் புத்தகத்தின் வழியே நிரூபித்திருக்கிறார் ஆசிரியர் ஜலில்.

கதையின் வலிமை!


நல்ல கதைகள், எப்பொழுதுமே ஒரு மாற்றத்தினை தொடங்குவதற்கான வலிமையான கருவியாக இருக்கின்றது. ஒரு முழு சினிமாவைவிட, ஒரு வரி பஞ்ச் டயலாக் பெரும் வரவேற்பையும், பாராட்டு களையும் பெற்றுவிடுவதைப் பார்க்கிறோம் அல்லவா! அதுபோல, எளிமையாக எழுதப் பட்டு வலிமையாக சொல்லப்படும் ஒரு குட் டிக்கதை, ஆயிரம் சொற்பொழிவுகளைவிட மதிப்புமிக்கது என்கிறார் ஆசிரியர். இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள கதைகள், ஒரு சில நிமிடங்களில் படித்து முடித்துவிடக்கூடியதாக இருந்தாலும், இதன் தாக்கம் நிரந்தரமாக நம் மனதில் நீடித்திருக்கும்படி சொல்லப்பட்டுள்ளது.

காலம் கடந்த செயல்!

ஆடம்பரமான ஒரு வீட்டில், கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு நைட்டிங்கேல் பறவை இருந்தது. இரவில் மட்டுமே பாடக்கூடிய இதன் செயல், அந்த வீட்டிற்கு அருகி லுள்ள மரத்தில் வசித்துவந்த ஒரு ஆந்தைக்கு பெரும் புதிராக இருந்தது. ஒரு நாள், இதைப்பற்றி நைட்டிங்கேலிடம் கேட்டது ஆந்தை. அதற்கு பதில் சொன்ன நைட்டிங்கேல், இந்த கூண்டில் பிடிக்கப்படும் போது, தான் பாடிக்கொண்டிருந்ததாகவும், அது ஒரு பகல் பொழுது என்றும் சொன்னது. மேலும், அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட தாகவும், அதன்பிறகு இன்றுவரை பகலில் பாடாமல் எச்சரிக்கையாக இருப்பதாகவும் சொன்னது. அதற்கு ஆந்தை, இப்பொழுது அந்த எச்சரிக்கை உணர்வால் எந்த பயனும் இல்லை என்று சொல்லி பறந்து சென்றது. ஆக, காலம் கடந்த முன்னெச்சரிக்கை நட வடிக்கையினால் ஒரு பயனும் இல்லை. நமது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆபத்து வருவதற்குமுன் எடுக்கப்படவேண் டுமே தவிர ஆபத்தில் மாட்டிக்கொண்டபின் அல்ல.

உழைப்பே உயர்வு!

ஒரு மரத்தின் கிளையில், தேனீக்களின் குரூப் ஒன்று, தங்களுக்கான தேன்கூடு ஒன்றை கட்டி முடித்திருந்தன. அந்த சமயம் அங்கு வந்த ஆண்தேனீக்கள் கூட்டம், அந்த தேன்கூட்டை சொந்தம் கொண்டாடி சண்டையிட்டன. இந்தப் பிரச்சினை, அருகில் வசித்துவந்த ஒரு குளவியிடம் கொண்டு செல்லப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட குளவி, இரு குரூப்பிடமும் புதிதாக இரண்டு தேன்கூட்டினை கட்டுமாறும், அதன் அளவு மற்றும் அதிலுள்ள தேனின் சுவை ஆகியவற்றை ஆராய்ந்து பிறகு தீர்ப்பை அளிப்பதாகவும் சொன்னது. இதனைக்கேட்ட முதல் தேனீக்கள் கூட்டம், அதற்கு உடன்படுவதாக அறிவித்தன. ஆனால், ஆண் தேனீக்களின் குரூப்போ, இந்த செயலிலிருந்து பின்வாங்க ஆரம்பித் தன. உடனே, தனது தீர்ப்பை அறிவித்த குளவி, இந்த தேன்கூடு முதல் தேனீக்கள் கூட்டத்திற்கே சொந்தம் என்றும் ஆண்தேனீக் கள் இதனை அபகரிப்பதற்காக வந்தவை என்றும் சொன்னது. இதிலிருந்து ஆசிரியர் நமக்கு சொல்லும் பாடம், உண்மையான உழைப்பு ஒருபோதும் வீண்போவதில்லை, அதற்கான வெகுமதி கிடைத்தே தீரும். மேலும், உழைக்காமல் எதுவும் கிடைக்கப்போவதும் இல்லை என்பதே.

கண்மூடித்தனம்!

ஒரு விஷயத்தை அவசரப்பட்டு நம்பி அதில் மாட்டிக்கொண்டு தடுமாறுவது ஒரு வரின் முட்டாள்தனத்தைக் காட்டுகின்றது. காட்டில் நரி ஒன்று, ஒருநாள் ஒரு கிணற் றில் தவறி விழுந்துவிட்டது. அதிலிருந்து வெளியே வருவதற்கான எல்லா முயற்சி களும் தோல்வியிலேயே முடிந்தன. அப் போது, அந்த வழியே வந்த ஆடு ஒன்றை அழைத்த நரி, இந்த கிணற்றில் சுவையான நீர் உள்ளதாகவும் அதனை குடிப்பதற் காகவே தான் இதில் இறங்கியிருப்பதாகவும் சொன்னது. இதனைக்கேட்ட அப்பாவி ஆடு துளியும் யோசிக்காமல் கிணற்றில் குதித்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நரி அந்த ஆட்டின் மேல் ஏறி கிணற்றைவிட்டு வெளியே குதித்து தப்பித்தது. அறிவற்ற அந்த ஆடு கிணற்றுக்குள்ளேயே மாட்டி தவித்தது. எந்த ஒரு செயலையும் செய் வதற்குமுன், மற்றவர்களின் ஆசை வார்த்தை களுக்கு மயங்காமல், அவரவர் சொந்த அறிவைக்கொண்டு ஆராய்ந்து செயல்படும் போது துன்பங்களைத் தவிர்க்கலாம் என்கிறார் ஆசிரியர்.

கற்பனைத்திறன்!

ஏரி ஒன்றில் நிறைய மீன்கள் கூட்டமாக வசித்துவந்தன. சுத்தமான தண்ணீர் மற்றும் போதுமான உணவு என மகிழ்ச்சியாக இருந் தன. ஒருநாள் ஒரு மீனவர் கூட்டம் இந்த ஏரியை கண்டறிந்து, அதில் உள்ள மீன்களை தங்களது வலைகளில் பிடிக்கத்தொடங் கினர். தினமும் தங்களது நண்பர்கள் சிலரை இழந்துக்கொண்டிருந்தன அந்த மீன்கள். மீன் கூட்டத்தில் உள்ள ஒரு புத்திசாலி மீன், இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க ஒரு திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி மீனவனின் வலையில் மாட்டிக் கொண்டபின், இறந்ததைப்போல செயலற்று கிடந்தது. இதைக் கண்ட மீனவன் அதை மீண் டும் தண்ணீருக்குள் விட்டுவிட்டு சென்றுவிட் டான். தனது கற்பனைத்திறனால் தப்பித் தது அந்த புத்திசாலி மீன். சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் நமது கற்பனைத்திறன் செயல்படும்போது நம்மால் பல துன்பங்களிலிருந்து விடுபட முடிகின்றது.

பழைய எதிரியும், புதிய நண்பனும்!

பொதுவாக நம்முடைய பழைய எதிரி யையோ அல்லது புதிய நண்பர்களையோ எளிதில் நம்பி, ஒரு செயலில் இறங்கிவிட வேண்டாம் என்கிறார் ஜலில். இதற்காக ஒரு புறா கூட்டத்தின் கதையை கொடுத்துள்ளார். மரம் ஒன்றில் பல புறாக்கள் கூட்டாக வாழ்ந்துவந்தன. இதனைக்கண்ட ஒரு கீரி பிள்ளை, ஒவ்வொரு நாளும் மரத்தின்மேல் ஏறி, ஒவ்வொரு புறாவாக வேட்டையாடி வந்தது. இவற்றையெல்லாம் நோட்டம்விட் டுக்கொண்டிருந்த பருந்து ஒன்று, மிகுந்த அனுதாபத்துடன் புறாக்களிடம், அவை களின் இடத்தை வேறு ஒரு மரத்திற்கு மாற்றிவிடும்படி சொன்னது. பருந்து தங்களின் பாரம்பரிய எதிரி என்பதை மறந்த புறா கூட்டம், தங்களுக்கு வேறு ஒரு பாது காப்பான இடம் பற்றி ஏதும் தெரியாது என்று சொல்ல, இதையே எதிர்பார்த்துக் கொண்டிருந்த பருந்து, அவைகளுக்கு உதவு வதாக சொல்லியது. மேலும், அந்த பாதுகாப் பான இடம் பற்றி தனக்கு தெரியும் என்றும், அங்கு புறாக்களை அழைத்துச்செல்ல வேண்டுமானால் புறாக்கள் ஒவ்வொன்றாக தன்னுடன் வரவேண்டுமென்றும் சொன்னது. தன் திட்டப்படி, ஒவ்வொரு புறாவாக அந்த மரத்தைவிட்டு கூட்டிச்சென்று தனக்கு இரையாக்கிக்கொண்டது பருந்து. பழைய எதிரியான கீரிபிள்ளையாலும், புதிய நண்பனான பருந்தாலும் அந்த புறாக்கூட்டமே அழிந்து போனது.

விசுவாசத்தின் விலை!

தகுதியான இடத்தில் மட்டுமே, ஒருவரின் விசுவாசத்திற்கு உண்மையான பலன் கிடைக்கும். சரியான புரிதல் இல்லாத இடத் தில் விசுவாசத்தைக்காட்டி தேவையில் லாமல் வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டாம் என்பதற்கான கதை இது. ஒருவர் தன் வீட் டில், நாய் மற்றும் கழுதை இரண்டையும் வளர்த்து வந்தார். ஒருநாள் இரவு அந்த வீட்டிலிருந்து ஏதோ சத்தம் கேட்டு எழுந்த நாய், தலையை உயர்த்தி பார்த்துவிட்டு மீண்டும் தூங்கச்சென்றது. இதைப்பார்த்துக் கொண்டிருந்த கழுதை, திருடர்கள் வந்திருக் கலாம், ஏன் குரைக்கவில்லை என்று நாயிடம் கேட்டது. தனது விசுவாசத்தால் ஏற்கனவே நொந்து நூடுல்ஸ் ஆன நாய், கழுதையிடம் ஒழுங்காக அதன் வேலையைமட்டும் பார்க்குமாறு சொன்னது.

ஆனால், கழுதை பலமாக கத்தி திருடர்களை மிரண்டு ஓட வைத்தது. கழுதையின் சத்தம் கேட்டு தூக்கத் திலிருந்து எழுந்த எஜமானர், கடுமையான கோபத்துடன் தனது தூக்கத்தைக்கெடுத்த கழுதையை அடித்து துவைத்துவிட்டார். விசுவாசம் என்பது ஒரு நல்ல பண்பே, ஆனால் அதை காட்ட வேண்டிய சூழ்நிலை அந்த விசுவாசத்திற்கு தகுதியானதுதானா என்பதை அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

ஆசிரியர் ஜலிலின் இந்த கதை வழி கருத்துகள் படிப்பதற்கு எளிதாக இருந்தாலும், இதன் வலிமை சக்தி வாய்ந்த தாகவே இருக்கின்றது. சூழ்நிலைக்கு தகுந் தாற்போல முடிவெடுப்பதில் உள்ள சூட்சு மங்களை அறிந்துகொண்டோமானால், தடைகளற்ற பாதையில் பயணித்து வெற்றியைப் பெறலாம் என்பதே இந்த புத்தகம் நமக்கு சொல்லித்தரும் பாடம்.

p.krishnakumar@jsb.ac.in

You May Like

More From This Category

More From this Author