Published : 20 Sep 2014 13:30 pm

Updated : 20 Sep 2014 13:30 pm

 

Published : 20 Sep 2014 01:30 PM
Last Updated : 20 Sep 2014 01:30 PM

கார்பெட்: நிறங்கள் சொல்லும் சேதி

உங்கள் வீட்டிற்கு அழகு சேர்க்க ஆசைப்பட்டால் ஒரு வண்ணமயமான கார்பெட் விரிப்பு அதை நிச்சயம் செய்யும். ஆனால் கார்பெட் வேண்டும் என நினைத்ததும் கடைக்குச் சென்று விடாதீர்கள்.

பொதுவாக கார்பெட் வியாபாரிகள் பல்வேறு கார்பெட் தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கிய மாதிரிகளைத் தங்கள் கடையில் வைத்திருப்பார்கள்.

அத்தனையையும் பார்த்தால் உங்களுக்குத் தலையும் புரியாது, காலும் புரியாது. அதனால் கார்பெட் வாங்கச் செல்லும் முன் முதலில் என்ன மாதிரியான கார்பெட் உங்களுக்குத் தேவை என்பதைக் கண்டுபிடியுங்கள். அப்பொழுதுதான் அழகு, சவுகரியம், நீடித்த உபயோகம் அனைத்தும் கூடிய தரமான கார்பெட்டை நீங்கள் பெற முடியும்.

ஒரு கார்பெட் வாங்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இதோ:

பொதுவாக கார்பெட் வியாபாரிகள் பின்வரும் கேள்விகளை உங்களிடம் கேட்பார்கள்:

கார்பெட் விரிக்கப்படும்

# அறையின் பயன்பாடு?

# வீட்டில் வசிப்பவர்கள் அந்த அறைக்குள் அதிகம் பிரவேசிப்பார்களா? அல்லது அரிதாகப் பிரவேசிப்பார்களா?

# அந்த அறை அனைவரும் புழங்கும் அறையா அல்லது பொழுதுபோக்கும் அறையா?

# வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழையும்போது, நேரடியாக அந்த அறைக்குள் நுழைய முடியுமா?

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:

பின் வரும் கேள்விகளை உங்களிடம் கேட்பதன் மூலம், எத்தகைய தரம், வடிவம், வகையைச் சேர்ந்த கார்பெட் உங்கள் வீட்டிற்கு உகந்தது என்பதைக் கார்பெட் வியாபாரி நிர்ணயம் செய்வார்.

உங்கள் எதிர்பார்ப்பைத் தெளிவாக விளக்க வேண்டும். ஓடி விளையாடும் குழந்தைகள், வளர்ப்புப் பிராணிகள், வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் புழங்கும் இடம் என அனைத்துத் தேவைகளுக்கும் ஏற்ற மாதிரியான கார்பெட்டைத் தேடுகின்றீர்களா? அல்லது உங்கள் அறை அழகியல் உணர்வோடு மிளிர வேண்டும் என்பதுதான் உங்கள் ஆசையா?

நிறம் மற்றும் பாணி:

விற்பனையாளரின் கேள்விகள்:

1. கார்பெட் விரிக்கப்பட்ட அறையில் எத்தனை பேர் புழங்குவார்கள்?

இந்தக் கேள்வி கேட்பதற்கான காரணம், வெளிர் நிறங்கள் (light colours) அதிகமாகப் புழங்கும் அறைகளுக்கு உகந்ததல்ல.

2. கார்பெட் விரிக்கப்பட்ட தரை மேல் குழந்தைகள் விளையாடுவார்களா? அல்லது அலுவல் பயன்பாட்டிற்கான அறையா?

வெளிர் நிறம் என்றால் பராமரிப்பு கடினமாகிவிடும் என்பதால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. மற்றொரு முக்கியக் காரணம் குழந்தைகள் விளையாடுகையில் கார்பெட்டில் தடுக்கி விழக் கூடாது என்பதாகும்.

3. சிறிய அறையா அல்லது பெரிய அறையா?

கார்பெட்டின் நிறத்தைப் பொருத்து ஒரு அறை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ காட்சியளிக்கும். அடர் நிறமாக இருந்தால் பிரம்மாண்டமான அறைகூடக் கொஞ்சம் குறுகலாகத் தோன்றும். அதே வெளிர் நிறங்களைப் பயன்படுத்தும்போது அறை அகலமாகத் தோன்றும்.

அறையில் படரும் ஒளி.

அறையினுள் சூரிய ஒளி பிரகாசிக்குமானால் அங்கு விரிக்கப்பட்டிருக்கும் கார்பெட்டின் இயல்பான நிறம் அப்படியே வெளிப்படும். ஆனால் வீட்டின் அறை வட திசையில் அமைந்திருந்தால் வெளிர் நிற கார்பெட்டே சரியான தேர்வாக இருக்க முடியும். இல்லாவிடில் இயற்கை வண்ணம் காட்டிலும் கருமையாக அவை தோன்றும்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:

கார்பெட் வாங்கக் கடைக்குப் போகும் போது, உங்கள் வீட்டின் சுவர் வண்ணம், மரச் சாமான்கள், வீட்டு அழகுச் சாதனப் பொருள்களின் நிற மாதிரிகளைக் கையோடு எடுத்துச் செல்ல மறவாதீர். உங்கள் வீட்டின் மற்ற நிறங்களோடு ஒத்துப் போகும் நிறத்தில் உள்ள கார்பெட் தான் மேலும் அழகு சேர்க்கும்.

நீங்கள் பயன்படுத்தும் நிறங்கள் உங்கள் மனநிலையோடு நேரடித் தொடர்புடையவை. சிவப்பு, பச்சை போன்ற பளீர் நிறங்கள் உங்களைச் சுறுசுறுப்படையச் செய்யும். அதே நீலம், வெள்ளை போன்ற நிறங்கள் மனதைச் சாந்தப் படுத்தும்.

கார்பெட் தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், உங்கள் வீட்டின் ஒளி அமைப்பும், கார்பெட் விற்கும் கடையின் ஒளி அமைப்பும் ஒன்றல்ல. தெளிவான வெளிச்சத்தில் கார்பெட்டைச் சரி பார்த்து வாங்குங்கள். அல்லது, கார்பெட்டின் மாதிரியை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாமா என்று கேளுங்கள்.

கார்பெட் வகைகள்கார்பெட் நிறம்வீட்டின் அழகுநிறங்களின் அர்த்தம்

You May Like

More From This Category

janu

ஜானுவின் ஹலோ காதல்!

இணைப்பிதழ்கள்

More From this Author