ந.வினோத் குமார்

‘எண்ணத்தில் தூய்மை, எழுத்தில் நேர்மை - என் கொள்கை இயற்கையும் இலக்கியமும் எனக்கான தளங்கள் நிறைய வாசிப்பு, நிறைவான எழுத்து - என் கனவு ந.வினோத் குமார் என்பவன் இவ்வளவே’ - இப்படிச் சொல்லும் ந.வினோத் குமார் பத்திரிகையாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். ஆனந்த விகடன், இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்து தமிழ் திசை, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றியவர். சுற்றுச்சூழல் தொடர்பாக மிகுந்த அக்கறையோடு பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். ‘வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்’ நூலுக்காக விருது பெற்றவர். பெண் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் குறித்து, ‘வான் மண் பெண்’ புத்தகத்தை எழுதியுள்ளார். ஏ.கே.ராமானுஜனின் ‘முந்நூறு இராமாயணங்கள்’ புத்தகத்தையும் கீதா ராமசாமியின், ‘நிலம் துப்பாக்கி சாதி பெண்’ புத்தகத்தையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
Connect:
ந.வினோத் குமார்
Read More
Hindu Tamil Thisai
www.hindutamil.in