சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், துருக்கி ராணுவம் எப்போது வேண்டுமானாலும் ஊடுருவலாம் என்று எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, சிரியாவின் அரசுப் படைகள் ரஷ்யப் படை உதவியுடன் இட்லிப் பகுதியிலிருந்த கிளர்ச்சியாளர்களின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றின. இதன் காரணமாக தற்போது சிரிய படைக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. ஆனால், அப்பகுதியில் தங்கள் கண்காணிப்பு நிலைகளை அமைத்துள்ள துருக்கிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிரியா - துருக்கி இடையே மோதல் வலுத்துள்ளது.
இந்த நிலையில் சிரியாவுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை துருக்கி அதிபர் எர்டோகன் விடுத்துள்ளார்.
இதுகுறித்து எர்டோகன் கூறும்போது, “இதுதான் எனது கடைசி எச்சரிக்கை. சிரியாவின் இட்லிப் பகுதியில் துருக்கியின் ராணுவம் எப்போது வேண்டுமானாலும் ஊடுருவலாம். துருக்கி மீண்டும் அகதிகளை எதிர்கொள்ளும் என்பதால் பாதுகாப்பான இட்லிப்பை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தவறவீடாதீர்