தமிழகம்

ஹஜ் பயண அரசு மானியம் ரூ.35,000 ஆக உயர்வு: தமிழக பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு

மோகன் கணபதி

சென்னை: புனித ஹஜ் பயணத்துக்கான அரசு மானியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.35,000 ஆக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்​ஜெட்​டை, தமிழக சட்டப்பேரவையில் தாக்​கல் செய்த நிதியமைச்​சர் மரிய வில்​சன், சிறுபான்மையினர் நலன்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அவர் தனது பட்ஜெட் உரையில், “மதச்சார்பற்ற சமூக நீதி அரசாகவும், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு முன்னோடி மாநிலமாகவும் தமிழ்நாடு திகழும்.

சிறுபான்மையின மாணவர்களுக்குக் கால்வி உதவித் தொகையினை இந்த அரசு தொடர்ந்து வழங்கும். தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி மூலம் முதல்முறையாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழங்கப்படும் 25,000 ரூபாய் மானியம் நமது அரசால் 35,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் 1.05 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் கூடுதலாகத் துவக்கப்படும். மேலும், கபர்ஸ்தான்கள், கல்லறைத் தோட்டங்களின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சிறுபான்மையினரைப் பாதுகாப்பதிலும், அவர்களின் நலன்களிலும் நமது முதல்வர் விஜய் தலைமையிலான அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைக்கு 1,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT