குத்துச்சண்டை என்றால் தனக்கு மிகுந்த ஆர்வம் என, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று (பிப்.15) காலை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவில் தமிழக முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று காலை தொடங்கின.
தடகளம், ஜூடோ, குத்துச்சண்டை, இறகுப் பந்து, கபடி, டென்னிஸ் ஆகிய போட்டிகள் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
அப்பொழுது 10,000 மீட்டர் ஓட்டப் போட்டி, கையுந்து பந்து கபடி ஆகிய போட்டிகளை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.
குத்துச்சண்டை போட்டியைத் தொடங்கி வைக்கச் சென்றபோது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆர்வத்தோடு தானும் கைகளில் உறைகளை மாட்டிக்கொண்டு களத்தில் இறங்கி மாணவர்களுடன் போட்டியிட்டார். குத்துச்சண்டை விளையாட்டில் தனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளதாக அமைச்சர் கூறியதைக் கண்டு அங்கிருந்த விளையாட்டு வீரர்களும் அதிகாரிகளும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
தவறவிடாதீர்