டி.கே.எஸ்.இளங்கோவன்: கோப்புப்படம் 
தமிழகம்

சிறப்பு வேளாண் மண்டலம்: மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்; டி.கே.எஸ்.இளங்கோவன்

செய்திப்பிரிவு

அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் மத்திய அரசிடம் அனுமதி பெற்று அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என, மாநிலங்களவை திமுக உறுப்பினரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்ற சட்டம் இயற்றப்படும் என, கடந்த 9-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை, விவசாய அமைப்புகள், அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.எஸ்.இளங்கோவன், "திடீரென்று அரசியல் காரணங்களுக்காக எதையாவது ஒன்றை அறிவித்துவிட்டுப் போவது நல்ல நிர்வாகம் அல்ல. அறிவிப்பு என்றால் முறையாக அனுமதி பெற்று, மத்திய அரசிடம் உத்தரவாதம் பெற்று, அதனடிப்படையில் அறிவிக்க வேண்டும்.

மத்திய அரசின் அனுமதியில்லாமல் மாநில அரசு இதனைச் செய்கிறதா, அல்லது மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இதில் முரண்பாடு இருக்கிறதா என்பது மக்களுக்குத் தெரிந்தாக வேண்டும்.

காவிரி டெல்டாவில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு, மாநில அரசின் அறிவிப்பின் படி, ஒரு உத்தரவாதத்தைத் தந்தால்தான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்" என, டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT