ராமதாஸ் 
தமிழகம்

“இன்று ஏப்ரல் ஒன்று: இந்த நாளை வாக்காளர் நாளாக மாற்றி விடாதீர்கள்” - ராமதாஸ்

செய்திப்பிரிவு

சென்னை: “இன்று ஏப்ரல் ஒன்று, இந்த நாளை வாக்காளர் நாளாக மாற்றி விடாதீர்கள்” என வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக் கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக மக்களுக்கு கோரிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூகவலைதளத்தில், “நாள்காட்டியில் இன்றைய நாள் ஏப்ரல் ஒன்று. இந்த நாள் இப்போது அழைக்கப்படும் நாளாகவே நீடிக்கட்டும். இந்த நாளை நாம் வாக்காளர்கள் நாளாக மாற்றி விடக் கூடாது. அவ்வாறு மாற்றி விடாமல் இருப்பதற்கு வரும் 19-ஆம் நாள் தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும் நாம் வாக்களிக்கக் கூடாது.

வாக்களிப்பீர் பாமக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிப்பீர் மாம்பழம், தாமரை, சைக்கிள், குக்கர் , பலா ஆகிய சின்னங்களுக்கு” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT