சுற்றுச்சூழல்

ஊட்டியில் தானியங்கி முறையில் பால் விற்பனை: ஆவின் நிர்வாகம் தீவிரம்

பிளாஸ்டிக் கவர்களை தவிரப்பு... சுற்றுச்சூழல் பாதுகாப்பு!

ஆர்.டி.சிவசங்கர்

ஊட்டி: சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வின் அடிப்​படை​யில், ஆவின் நிறு​வனம் சார்​பில் ஊட்​டி​யில் தானி​யங்கி பால் விற்​பனை இயந்​திரம் அமைப்​ப​தற்​கான பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

நீல​கிரி மாவட்​டத்​தின் சுற்​றுச்​சூழலை பாது​காக்​கும் நோக்​கில் 19 வகை​யான பிளாஸ்​டிக் பொருட்​கள் பயன்​பாட்​டிற்கு தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது.

இதன் தொடச்​சி​யாக மலைப்​பகு​தி​களான ஊட்டி மற்​றும் கொடைக்​கானல் பகு​தி​களில் அனைத்து வகை பிளாஸ்​டிக் பயன்​பாட்​டிற்கும் முழு​மை​யான தடை விதிக்​கக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு தொடரப்​பட்​டது.

சுற்​றுலாப் பயணி​களாலும், உள்​ளூர் மக்​களாலும் பயன்​படுத்​தப்​படும் பிளாஸ்​டிக் கழிவுகள் அங்​குள்ள வன விலங்​கு​களுக்​கும், நீர்​நிலை​களுக்​கும் பெரும் அச்​சுறுத்​தலாக விளங்​கு​வதை நீதி​மன்​றம் சுட்​டிக்​காட்டியது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் சிறப்பு அமர்வு முன்பு விசா​ரணைக்கு வந்​த​போது, தமிழ்​நாடு கூட்​டுறவு பால் உற்​பத்​தி​யாளர்​கள் இணை​யம் (ஆவின்) சார்​பில் விரி​வான பதில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

அதில், நீல​கிரி மாவட்​டம் மற்​றும் திண்​டுக்​கல் மாவட்​டங்​களில் உள்ள முக்​கியப் பகு​தி​களில் தானி​யங்கி பால் விற்​பனை இயந்​திரம் நிறு​வப்​படும். முதற்​கட்​ட​மாக சோதனை அடிப்​படை​யில் கொடைக்​கானல் மற்​றும் ஊட்டி நகரங்​களில் மக்​கள் தொகை நெருக்​கம் நிறைந்த பகு​தி​களில் இந்த இயந்​திரங்​கள் அமைக்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, ஊட்டி நகரில் சேரிங்​கி​ராஸ் பகு​தி​யில் உழவர் சந்தை அருகே சோதனை அடிப்​படை​யில் ஆவின் பால் விற்​பனை இயந்​திரம் அமைப்​ப​தற்​கான பணி​கள் தொடங்​கப்​பட்டு உள்​ளன. இது குறித்து ஆவின் நிர்​வாகத்​தினர் கூறும் போது, “உத்தரபிரதேசத்தை சேர்ந்த தனி​யார் நிறு​வனத்​திடம் ஒரு இயந்​திரம் ரூ.3.60 லட்​சம் என்ற விலை​யில் இரண்டு இயந்​திரங்​கள் வாங்​கப்​பட்​டுள்​ளன.

இயந்​திரங்​களை வைத்த பிறகு, அரு​கில் உள்ள வீடு​கள், ஓட்​டல்​கள் ஆகிய​வற்​றுக்கு பாக்​கெட்​களில் பால் விநி​யோகிக்​கக் கூடாது என்று மொத்த ஏஜென்ட்​கள், வியா​பாரி​களுக்கு அறி​வுறுத்​தப்பட உள்​ளது.

இயந்​திரங்​களை அமைத்த பிறகு பாக்​கெட்​களில் பால் விற்​பனை நிறுத்​தப்​படும். தானி​யங்கி விற்​பனை இயந்​திரங்​களின் செயல்​பாடு, மக்​களின் வரவேற்பு உள்​ளிட்​டவை குறித்து ஆய்வு செய்​யப்​படும்.

ஊட்டி உழவர் சந்​தை​யில் இயந்​திரம் அமைக்​கும் பணி​கள் விரை​வில் முடிக்​கப்​பட்​டு, பொது​மக்​கள் பயன்​பாட்​டுக்கு கொண்​டு​வரப்பட உள்​ளது. இதேபோல் நீல​கிரி மாவட்டம் முழு​வதும் பல்​வேறு இடங்​களில் இந்த இயந்​திரங்​கள் கொண்​டு​வரப்பட உள்​ளன” என்​றனர்.

SCROLL FOR NEXT