'தளபதி 65' படத்தின் வெளியீட்டை இப்போதே முடிவு செய்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாஸ்டர்'. விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகன், கெளரி கிஷண், வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் லலித் வாங்கியுள்ளார். தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து, ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு. இதற்காக பணிகள் அனைத்தும் படுதீவிரமாக நடைபெற்று வருகிறது. இது விஜய் நடிப்பில் உருவாகும் 64-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் 65-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சுதா கொங்காரா அல்லது பாண்டிராஜ் இருவரில் ஒருவர்தான் இயக்குநராக இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இயக்குநர் யார் என்பது முடிவாகவில்லை.
ஆனால், இந்தப் படத்தை 2021-ல் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளது சன் பிக்சர்ஸ். இதனை முன்வைத்தே கதையும், இயக்குநரும் முடிவாகக்கூடும்.
தவறவிடாதீர்