தமிழ் சினிமா

போயி வேலை இருந்தா பாருங்கடா: விஜய் சேதுபதி காட்டம்

செய்திப்பிரிவு

விஜய் வீட்டில் வருமான வரி சோதனை தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவலுக்கு விஜய் சேதுபதி காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

'பிகில்' படம் தொடர்பாக விஜய் வீடு, ஏஜிஎஸ் அலுவலகம், ஸ்கிரீன் சீன் அலுவலகம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் அலுவலகங்கள் மற்றும் வீடு ஆகியவற்றில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்தச் சோதனைக்காக 'மாஸ்டர்' படப்பிடிப்பிலிருந்து அழைத்து வரப்பட்டார் விஜய்.

இந்தச் சோதனை முடிந்த பிறகே படப்பிடிப்பில் கலந்துகொண்டார் விஜய். இந்தச் சோதனையின் பின்னணி குறித்து பலவிதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. கிறிஸ்தவக் குழுக்கள் விஜய் மூலமாகத் தமிழகத்தில் காலூன்ற நினைப்பதாகவும், இதில் முதல் படியாக விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்டோர் சமீபத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்தச் செய்தியைத் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து விஜய் சேதுபதி, "போயி வேற வேலை இருந்தா பாருங்கடா..." என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தச் செய்திகளில் உண்மையில்லை என்பது தெளிவாகியுள்ளது.

தவறவிடாதீர்

SCROLL FOR NEXT