தமிழ் சினிமா

சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு

செய்திப்பிரிவு

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

'கென்னடி கிளப்' படத்துக்குப் பிறகு, அடுத்து இயக்கவுள்ள படத்துக்குக் கதை எழுதி வந்தார் இயக்குநர் சுசீந்திரன். சில நாட்களுக்கு முன்பு காலையில் நடைப்பயிற்சி சென்ற போது, சிறுவிபத்தில் சிக்கினார். மருத்துவர்கள் ஓய்வில் இருக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, தனது அடுத்த படத்துக்கான கதை முழுமையாக முடித்துவிட்டார் சுசீந்திரன். இந்தக் கதையை விக்ரம் பிரபுவிடம் சொல்லவே, அவரோ கதை பிடித்திருப்பதால் உடனடியாக தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

மார்ச் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளனர். இந்தப் படத்தை சுசீந்திரனின் சகோதரர் தாய் சரவணன் தயாரிக்கவுள்ளார். படப்பிடிப்பு தொடங்குவதற்குள் சுசீந்திரன் முழுமையாகக் குணமாகித் திரும்பிவிடுவார் என்பது தெளிவாகியுள்ளது.

தற்போது விக்ரம் பிரபுவுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தவறவிடாதீர்

SCROLL FOR NEXT