தமிழ் சினிமா

சந்தானம் - கண்ணன் இணையும் பிஸ்கோத்

செய்திப்பிரிவு

கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் படத்துக்கு 'பிஸ்கோத்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

'டகால்டி' படத்தின் பணிகளுக்கு இடையே, கண்ணன் இயக்கத்தில் உருவான படத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கினார் சந்தானம். மசாலா பிக்ஸ் நிறுவனம் மூலம் கண்ணனே தயாரித்து வரும் இந்தப் படத்தின் கதைக்களத்துக்காக சிலம்பம் கற்றுக் கொண்டு நடித்துள்ளார் சந்தானம்.

இதில் அவருக்கு நாயகிகளாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் ஸ்வாதி முப்பலா ஆகியோர் நடித்து வந்தார்கள். முக்கியக் கதாபாத்திரத்தில் பழம்பெரும் நாயகி செளகார் ஜானகி நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது இந்தப் படத்துக்கு 'பிஸ்கோத்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க, படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்தப் படத்தில் 30 நிமிடக் காட்சிகள் 1980-களில் நடைபெறுவது போன்று வடிவமைத்திருந்தார் இயக்குநர் ஆர்.கண்ணன். இந்தக் காட்சிகளை ஹைதராபாத்தில் 80 லட்ச ரூபாய் செலவில் பிரம்மாண்ட அரங்கில் படமாக்கியுள்ளது படக்குழு.

தவறவிடாதீர்

SCROLL FOR NEXT