'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கப்படும் என்ற தேதியைத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள 'மாநாடு' படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பல சிக்கல்களுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதால், எப்போது தொடங்கலாம் என்று பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
மேலும், முன்பு ஒப்பந்தம் செய்த நடிகர்கள் அனைவரிடமும் தற்போது தேதிகள் அளிக்குமாறு கேட்டு வாங்கி வந்தது படக்குழு. இறுதியாக, அனைவரின் தேதிகளும் ஒன்றுகூடி பிப்ரவரி 19-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் போப் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
'மாநாடு' படத்தின் பூஜையுடன் பிப்ரவரி 19-ம் தேதியே நடைபெறவுள்ளது. அதில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவிக்கவுள்ளனர்.
தவறவிடாதீர்