தமிழ் சினிமா

'வேட்டை' ரீமேக் தான் 'பாஹி 3' 

செய்திப்பிரிவு

இணையத்தில் வைரலாகி வரும் 'பாஹி 3' படத்தின் ட்ரெய்லரை வைத்துப் பார்த்தால், அது 'வேட்டை' படத்தின் ரீமேக் என்பது தெளிவாகிறது.

அஹ்மத் கான் இயக்கத்தில் டைகர் ஷெராஃப், ஷ்ரத்தா கபூர், ரித்தேஷ் தேஷ்முக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பாஹி 3'. மார்ச் 6-ம் தேதி வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று (பிப்ரவரி 6) வெளியாகியுள்ளது.

இந்த ட்ரெய்லரில் இருக்கும் பிரம்மாண்டம், சண்டைக் காட்சிகளைப் பார்த்து இந்தி திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ட்ரெய்லரில் உள்ள காட்சிகளை வைத்துப் பார்க்கும்போது, இந்தப் படம் தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான 'வேட்டை' படத்தின் ரீமேக் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆர்யா கதாபாத்திரத்தில் டைகர் ஷெராஃப், மாதவன் கதாபாத்திரத்தில் ரித்தேஷ் தேஷ்முக், அமலா பால் கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளனர். இந்த ட்ரெய்லர் தொடர்பாக 'வேட்டை' படக்குழுவினரிடம் விசாரித்தபோது, அவர்களும் ரீமேக் விற்பனை செய்திருப்பதை உறுதி செய்தனர்.

தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT