Published : 06 Feb 2020 11:24 AM
Last Updated : 06 Feb 2020 11:24 AM

பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் கிர்க் டக்ளஸ் மரணம்

ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகரான கிர்க் டக்ளஸ் மரணமடைந்தார். அவருக்கு வயது 103.

1946ஆம் ஆண்டு ’தி ஸ்ட்ரேஞ் லவ் ஆஃப் மார்த்தா இவர்ஸ்’ படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய கிர்க் டக்ளஸ் இதுவரை 90க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த சாம்பியன் (1949), ஸ்பார்டகஸ் (1960), லஸ்ட் ஃபார் லைஃப் (1956) ஆகிய படங்கள் இவரது திரையுலக பயணத்தில் மைல்கற்களாக அமைந்தனர். இதில் ’சாம்பியன்’ படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அவரது இரட்டை தாடையும் கம்பீரமான உடற்தோற்றமும் ஹாலிவுட் ரசிகர்களால் மறக்கமுடியாதவை.

ஹாலிவுட் ஜாம்பவான் இயக்குநர்களான பில்லி வில்டெர் முதல் ஸடான்லி குப்ரிக் வரை அனைத்து இயக்குநர்களின் படங்களிலும் நடித்துவிட்ட கிர்க் டக்ளஸுக்கு 1996ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த டக்ளஸ் நேற்று (05.02.2020) கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்தார்.

கிர்க் டக்ளஸ் மரணத்துக்கு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1910 முதல் 1960 வரை ஹாலிவுட் சினிமாவின் பொற்காலம் என்று அழைக்கப்படும் காலகட்டத்தில் கோலோச்சிய நடிகர்களில் ஒருவரான கிர்க் டக்ளஸின் மரணம் ஹாலிவுட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தவறவிடாதீர்கள்:

சீனாவில் கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 564-ஐ தாண்டியது

ஜாலியன்வாலா பாக் போன்று ஷாகின்பாக் மாறக்கூடும்: ஒவைசி சந்தேகம்

சினிமா பாணியில் 5 லட்சம் மோசடி: இரிடியம் தருவதாக ஏமாற்றிய திமுக பிரமுகர் உட்பட 3 பேர் கைது

ஏன் எல்ஐசியைப் பாதுகாப்பது முக்கியம்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x