தென்னிந்திய சினிமா

திரைப்​படங்​களில் நாளை முதல் சப்-டைட்டில் கட்டாயம்

ப்ரியா

தணிக்கை வாரி​யம் அறி​விப்பு திரையரங்​கு​களில் வெளியாகும் அனைத்து மொழி இந்​தி​யத் திரைப்படங்களுக்​கும் மார்ச் 15 (நாளை) முதல் சப்​-டைட்டிலும் காது கேளாதோருக்​கான விளக்​கக் குறிப்​பு​களும் கட்​டா​யம் என மத்​திய தணிக்கை வாரி​யம் அறிவித்துள்​ளது.

திரைப்பட தணிக்​கை​யில், கடந்த 2024-ம் ஆண்டு மத்​திய அரசு சில புதிய விதி​களை அறி​வித்​தது. அதன்​படி, காது கேளாதவர்​கள் படங்​களைப் புரிந்து கொள்​ளும் வகை​யில் சப்-டைட்​டிலும் பார்​வையற்​றவர்​களுக்​காக ஒலி வடி​வில் காட்​சிகளை விவரிப்​பதும் சேர்க்​கப்பட வேண்​டும் என்று அறிவிக்​கப்​பட்​டது. மார்ச் - 15 முதல் அதை மத்​திய தணிக்கை வாரி​யம் கட்​டாய​மாக்கி உள்​ளது.

          

இப்​பு​திய முறைப்​படி அனைத்து இந்​திய மொழித் திரைப்​படங்​களை​யும் தணிக்​கைக்கு சமர்ப்​பிக்​கும் போது சப்-டைட்​டில், ஒலி வடிவம் ஆகிய​வற்​றுடன் இணைத்து அனுப்ப வேண்​டும். அப்​படி அனுப்​பி​னால் மட்​டுமே தணிக்​கைச் சான்​றிதழ் வழங்​கப்​படும்.

இந்​தப் புதிய அறி​விப்பு சமூக ஊடகங்​களில் சர்ச்​சையை ஏற்​படுத்தி இருக்​கிறது. சப்-டைட்​டில், ஒலி வடிவம் ஆகிய​வற்​றுடன் படத்​தைப் பார்த்​தால் அது சினிமா பார்க்​கும் அனுபவத்​துக்கு இடையூறாக இருக்​கும் என்​றும் படம் பார்க்​கும்​போது, கீழே சப்​-டைட்​டிலில் வரும் வார்த்​தைகளைப் பார்ப்​பது கவனத்தை சிதறடிக்​கும் என்​றும் பலர் விமர்​சித்து வருகின்​றனர்.

SCROLL FOR NEXT