தென்னிந்திய சினிமா

'புட்டா பொம்மா' பாடல்: வைரலாகும் ஷில்பா ஷெட்டி டிக்-டாக்

செய்திப்பிரிவு

தெலுங்கில் பெரும் வெற்றியடைந்த 'புட்டா பொம்மா' பாடலுக்கு, ஷில்பா ஷெட்டி செய்துள்ள டிக்-டாக் வீடியோ வைரலாகி வருகிறது.

த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே, முரளி ஷர்மா, ஜெயராம், தபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அலா வைகுந்தபுரம்லோ'. தமன் இசையமைப்பில் உருவான இந்தப் படத்தை கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஹரிகா & ஹரிகா கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்தது. இந்தப் படம் தெலுங்கில் மாபெரும் வசூல் சாதனைப் புரிந்துள்ளது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே பெறும் வரவேற்பைப் பெற்றன. இதில் 'புட்டா பொம்மா' என்ற பாடல் மட்டும் சமூக வலைதளத்தில் பெரும் வைரலானது. ஏனென்றால், படத்தில் அந்தப் பாடலுக்கான நடன அமைப்பை வைத்து பலரும் டிக்-டாக் வீடியோ செய்து வெளியிட்டு வருகிறார்கள்.

டிக்-டாக் வீடியோக்களில் இப்போது இந்தப் பாடல் தான் மிகவும் பிரபலம். தற்போது ஷில்பா ஷெட்டியும் இந்தப் பாடலுக்கு டிக்-டாக் செய்து, தனது டிக்-டாக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ பெரும் வைரலாகி வருகிறது. இது வரை ஷில்பா ஷெட்டியின் இந்த டிக்-டாக் வீடியோவுக்கு 1.7 மில்லியன் விருப்பங்கள் கிடைத்துள்ளது.

தவறவிடாதீர்

SCROLL FOR NEXT