சல்மான் கான் நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
தமிழில் 'முகமூடி' படத்துக்குப் பிறகு பூஜா ஹெக்டேவுக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அங்கு முன்னணி நாயகியாக வலம் வந்தவர், அப்படியே இந்தியிலும் அறிமுகமானார்.
தற்போது இந்தி - தெலுங்கு என இரண்டிலுமே முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. தற்போது பிரபாஸ் - ராதாகிருஷ்ணா படம், ’மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்’ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் 'ஹவுஸ்ஃபுல் 4' படத்துக்குப் பிறகு எந்தவொரு படத்திலுமே ஒப்பந்தமாகாமல் இருந்தார்.
தற்போது தெலுங்கில் இவர் நாயகியாக நடித்த 'அலா வைகுந்தபுரம்லோ' பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதைத் தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகள் வந்துள்ளது. அதில் சல்மான் கானுக்கு நாயகியாக இந்திப் படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார் பூஜா ஹெக்டே
'கபீ ஈத் கபி தீவாளி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஃபர்ஹாத் சம்ஜி இயக்கவுள்ளார். சாஜித் நதியாத்வாலா தயாரிக்கவுள்ளார். அடுத்தாண்டு ஈத் விடுமுறை நாட்களுக்கு இந்தப் படம் வெளியாகவுள்ளது.
தவறவிடாதீர்