சிறப்பு பலன்கள்

கடகம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2026

02.06.2026 முதல் 26.06.2027 வரை

முனைவர் கே.பி.வித்யாதரன்

முடியும் என்பது மூலதனம், முடியாது என்பது மூடத்தனம் என்ற வரிகளுக்கு ஏற்ப தொடர்ந்து முயற்சித்து வெற்றி பெறும் கடக ராசிக்காரர்களே!

குரு பகவான், ஜூன் 02 முதல் உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து பலன் தரப்போகிறார். ‘ஜென்ம குருவாயிற்றே...' என்று பதற்றம் அடையாதீர்கள். குரு பகவானின் பார்வை பலன்கள் உங்களுக்கு ஓரளவுக்கு சாதகமான சூழலை தரும். பூர்வீகச் சொத்து இப்போது கைக்கு வரும். கம்பீரமாக பேசுவீர்கள். குடும்பத்தின ருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். அரசு வேலைகளில் இருந்த இழுபறி நிலை மாறும்.

ஜென்ம குரு என்பதால் வெளிவட்டாரத்தில் கொஞ்சம் கவனமாக பழகுங்கள். உடல் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். நடைபயிற்சி, யோகா செய்வது நல்லது. சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பின் அளவை சரிபார்த்துக் கொள்ளுங்கள். திட்டமிட்ட படி வெளிநாட்டு பயணங்கள் சாதகமாக அமையும். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் குடும்ப ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

குரு பகவான் பார்வை பலன்கள்:

குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்ப்பதால், நீண்ட நாளாக குழந்தை இல்லாத தம்பதிக்கு இப்போது வாரிசு உருவாகும். பிள்ளைகளின் விருப் பங்களை பூர்த்தி செய்வீர்கள். பூர்வீகச் சொத்தால் ஆதாயம் உண்டு. புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். சிலருக்கு வீடு வாங்கும் அமைப்பு உண்டாகும்.

குரு பகவான் 7-ம் வீட்டை பார்ப்பதால், வீட்டில் தாமதமான சுப நிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டு. கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் குருவின் பார்வை விழுவதால், மறைந்து கிடக்கும் திறமைகள் வெளிப்படும். யாரையும் விமர்சிக்காதீர்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் சஷ்டம - பாக்யாதிபதியு மான குருபகவான் தனது நட்சத்திரத்தில் 02.06.26 முதல் 18.06.26 வரை பயணம் செய்வதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.

சப்தம - அஷ்டமாதிபதியுமான சனி பகவானின் நட்சத்திரத்தில் 18.06.26 முதல் 19.08.26 வரை குரு பகவான் பயணம் செய்வதால் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். தைரிய - விரயாதிபதியுமான புதனின் நட்சத்திரத்தில் 19.08.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 26.06.27 வரை குருபகவான் பயணம் செய்வதால் புதிய பொறுப்புகள் தேடி வரும்.

கேதுவின் நட்சத்திரத்தில் 31.10.26 முதல் 25.01.27 வரை குருபகவான் செல்வதால் பேச்சுத் திறன் அதிகரிக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் போட்டிகள் உடைபடும். எதிர்பார்த்தபடி லாபம் அதிகரிக் கும். சந்தை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு பெரிய முதலீடு செய்யுங்கள். வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். அனுபவமில்லாத தொழி லில் இறங்க வேண்டாம். உணவு, எண்ணெய் வகைகள், மோட்டார் உதிரி பாகங்கள் மூலம் லாபமடைவீர்கள். பங்கு தாரர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.

உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். பதவி, சம்பள உயர்வு உண்டு. பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டாதீர்கள். சக ஊழியர்களிடம் குடும்ப விஷயங்களை சொல்ல வேண்டாம். கணினி துறையினருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். விமர்சனங்களுக்கு செவி சாய்க்காதீர்கள். இந்த குருப்பெயர்ச்சி கடும் முயற்சியால் இலக்கை எட்டும் காலமாக அமையும்.

குரு பகவான் பரிகார தலங்கள்:

அம்பாசமுத்திரத்தில் இருந்து 9 கிமீ தொலைவில் உள்ள மூன்றீசுவரர் கோயில் தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். வாய் பேசாத குழந்தைகளுக்கு உதவுங்கள். எதிலும் வெற்றி கிட்டும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT