அமெரிக்காவிலிருந்து பயங்கரவாதத்தை விரட்ட அனைத்தையும் செய்வேன்: டொனால்டு ட்ரம்ப் ஆவேசப் பேச்சு

By பிடிஐ

அமெரிக்கா ஒன்று படவேண்டுமென்றால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும், இதற்காக அனைத்தையும் செய்வேன் என்று டொனால்டு ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

மதவெறியையும், தவறான எண்ணங்களையும் ஒரு போதும் இனி அனுமதிக்க முடியாது என்றார் ட்ரம்ப்.

சின்சினாட்டியில் மக்கள் முன் உரையாற்றிய ட்ரம்ப் கூறியதாவது: பயங்கரவாதத்தை அமெரிக்காவிலிருந்து விரட்ட நம் அதிகாரத்தின் கீழ் உள்ள அனைத்தையும் செய்வோம். மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மக்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

இவர்கள் யார், இவர்கள் எங்கு இருக்கின்றனர்?, அவர்கள் சிந்தனை என்ன? என்று எதுவும் நமக்குத் தெரியாது, இதனை நிறுத்தப்போகிறோம். ஒஹியோவில் என்ன நடந்தது என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள். ஒஹியோ மாகாண பல்கலைக்கழகத்தில் வன்முறை அராஜகம் நிகழ்த்தப்பட்டது. அதனை நீங்கள் நேரடியாக அனுபவித்துள்ளீர்கள்.

இந்தத் தாக்குதல்கள் முட்டாள் அரசியல்வாதிகளாள் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு பிரச்சினையாகும். நமது குடியேற்ற விதிமுறைகள் அபாயகரமானவர்களை ஸ்க்ரீன் செய்ய தவறிவிட்டது. எதிர்கால பயங்கரவாதம் இங்குதான் உள்ளது. இவ்வாறு கூறினார் ட்ரம்ப்.

கடந்த திங்களன்று சோமாலியாவைச் சேர்ந்த மாணவ ரொருவர் ஒஹியோ பல்கலை.யில் தனது காரை தாறுமாறாக ஒட்டிச் சென்று கத்தியால் பலரை தாக்கினார் இதில் 11 பேர் காயமடைந்தனர், கடைசியில் போலீஸ் அவரை சுட்டு வீழ்த்தினர்.

இந்தத் தாக்குதலை நடத்திய சோமாலிய அகதி பாகிஸ்தானில் சில ஆண்டுகள் வசித்து வந்தவர் பிறகு அமெரிக்கா வந்துள்ளார்.

இந்நிலையில் தாக்குதலைக் கண்டித்த ட்ரம்ப், “மதவெறி, தப்பெண்ணம் போன்றவற்றை நாம் கடுமையாக கண்டிக்கிறோம், எந்த ஒரு வெறுப்பையும் நாம் மறுக்கிறோம், ஒதுக்குதல் மற்றும் தனிமைப்படுத்துதல் என்பதையும் நாம் வலுக்கட்டாயமாக மறுக்க வேண்டியுள்ளது.

நம்மை பிரித்தாள்வது எது என்பதை ஆராய்வதில் நாம் அதிகமான நேரம் செலவிடுகிறோம். ஆனால் இப்போது ஒரே ஒரு விஷயத்தை நாம் தழுவ வேண்டும் அதுதான் அமெரிக்கா என்பது, அமெரிக்கா ஒன்றிணைந்து விட்டால் நம் தொடு எல்லைக்கு வெளியே எதுவும் இல்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்