வெற்றியை உறுதி செய்ய உங்கள் வாக்குகள் அவசியம்: ஆதரவாளர்களுக்கு ஒபாமா வேண்டுகோள்

By பிடிஐ

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்து கணிப்புகளில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே மிக நெருக்கமான போட்டி நிலவுவதாக கூறியுள்ள நிலையில் ஆதரவாளர்கள் பெருந்திரளாக வந்து வாக்களிக்குமாறு ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்பும், ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரியும் கருத்துக் கணிப்புகளில் மாறி மாறி முன்னிலை வகுத்து வருகின்றன.

இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஃபுளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட ஒபாமா பேசும்போது, "அதிபர் தேர்தல் நெருங்கி விட்டதால் ஆதரவாளர்கள் வெளியே வந்து தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.

குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நுழைய தகுதியற்றவர். அவர் அமெரிக்க ஜனநாயகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்" என்று பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

14 mins ago

சினிமா

15 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்