பாகிஸ்தானில் ஐஎஸ் நடவடிக்கைகள் அதிகரிப்பு: ஆட்கள் தேர்வும் தீவிரமடைவதாகத் தகவல்

By ஏபி

இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதக் குழுவின் இருப்பு பாகிஸ்தானில் அதிகரித்துள்ளது. அங்கிருந்து உஸ்பெக் தீவிரவாதிகளை அந்த அமைப்பு தங்கள் அமைப்புக்குள் இழுத்து வருகிறது, மேலும் அதிருப்தி தாலிபான் தீவிரவாதிகளையும் தங்கள் பக்கம் இழுத்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக போலீஸ் அதிகாரிகள், தாலிபான் அமைப்பைச் சேர்ந்த அதிகார மட்டம் மற்றும் பிற அரசியல் ஆய்வாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

நேற்று பலுசிஸ்தான் பகுதியில் சூஃபி புனித இடத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 50 பேர் பலியாகி, 100 பேர் காயமடைந்தது. தற்கொலை படையைச் சேர்ந்த ஒருவர் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக தெரியவந்துள்ள நிலையில் தாக்குதல் நடத்தியவர் படமும் வெளியிடப்பட்டுள்ளது .

தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதம் போலீஸ் அகாடமி மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு ஐஎஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டது. அப்போது அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்திடன் தாலிபான் அமைப்பு அதிகார மட்டம் கூறும்போது தாக்குதல் நடத்தியவர் உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் இவர் உஸ்பெக் இஸ்லாமிக் ஸ்டேட் பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் கூறியிருந்தனர்.

போலீஸ் அகாடமி தாக்குதலின் போது ஐஎஸ் பிற்பாடு பொறுப்பேற்று கொண்டது. ஆனாலும் பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிர ஷியா எதிர்ப்பு அமைப்பான லஷ்கர் இ ஜாங்வி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஐ.எஸ். உடன் இணைந்து தாங்கள்தான் தாக்குதல் நடத்தியதாக உரிமை கொண்டாடினர்.

துருக்மெனிஸ்தான், ஈரான் வழியாக ஆப்கான் அடங்கிய ஒரு மிகப்பெரிய பண்டைய பூகோள பகுதியை குறிப்பிட்டு ஆப்கனிலும், பாகிஸ்தானிலும் இயங்கி வரும் ஐ.எஸ். இங்கு தங்கள் இயக்கத்திற்கு கொராசானில் இஸ்லாமிக் ஸ்டேட் என்று பெயரிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் கிழக்கு நங்கர்ஹர் மாகாணத்தில் ஐஎஸ் இன் கொராசான் அமைப்பு முகாம் அமைத்துள்ளது. இந்த அமைப்பு இராக், சிரியா ஐஎஸ் அமைப்புடன் இணைந்திருப்பதாக உறுதியாக கூறினாலும் நேரடி நடமுறைத் தொடர்பு அல்லது நிதி ஆதார தொடர்பு இருக்குமா என்பது தெளிவாகவில்லை.

ஆப்கனில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளில் பெரும்பாலானோர் பாகிஸ்தான் நாட்டு குடிமகன்கள் என்று ஆக்பன் அதிகாரிகள் மற்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அயல்நாட்டு தீவிரவாதிகளுடன் அதிருப்தி தாலிபான் போராளிகளும் பாகிஸ்தான், மற்றும் ஆப்கனிலிருந்து ஐ.எஸ்-இல் இணைந்துள்ளனர். அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் பலியானதாகக் கூறப்படும் ஹபீஸ் சயீத் என்ற முன்னாள் பாகிஸ்தானிய தாலிபான் கமாண்டர்தான் இந்தக் குழுவுக்கு தலைவர். ஐஎஸ் இதுவரை ஹபீஸ் சயீதின் இறப்பை அங்கீகரிக்கவில்லை என்பதும் விஷயங்களை மேலும் உறுதி செய்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

17 mins ago

சுற்றுச்சூழல்

27 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

22 mins ago

விளையாட்டு

43 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்