உலக மசாலா: திரைக்கடல் ஓடியும் மணமகள் தேடு!

By செய்திப்பிரிவு

சீனாவில் மணப்பெண்கள் பற்றாக்குறை இருப்பதால், ரஷ்ய மணப் பெண்களைத் தேடிச் செல்கிறார்கள் சீன ஆண்கள். வெற்றிகரமான இளம் தொழிலதிபர்கள், ஒவ்வோர் ஆண்டும் சைபீரியாவில் நடைபெறும் ‘மணப்பெண் சுற்றுலா’வில் கலந்துகொள்கிறார்கள். அந்த நிகழ்ச்சியின் இறுதியில் தங்களுக்குப் பிடித்த மணமகளைத் தேர்ந்தெடுத்து, திருமணம் செய்துகொள்கிறார்கள். இந்த ஆண்டு பெய்ஜிங், ஹாங்காங், ஷான்காய், ஷென்ஜென் பகுதிகளைச் சேர்ந்த 5 தொழிலதிபர்களும் ரஷ்யாவைச் சேர்ந்த 25 பெண்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 25-45 வயது ஆண்களும் 25-35 வயது பெண்களும் கலந்துகொண்டனர். முதலில் சம்பிரதாயச் சந்திப்பு, மணமகன், மணமகள் குறித்த விவரங்கள் பரிமாற்றம், குடும்பம், தொழில், பிடித்தவை, பிடிக்காதவை, எதிர்பார்ப்புகள், திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும் போன்ற விஷயங்களை எல்லாம் ஆண்களும் பெண்களும் பரிமாறிக்கொள்கிறார்கள்.

இறுதியில் இணையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். சீன ஆண்கள், பெண்களை மிகவும் மதிக்கிறார்கள் என்று புகழ்கிறார்கள் ரஷ்யப் பெண்கள். “எப்பொழுதும் மிதமான அழகுடன் அமைதியாகப் புன்னகை செய்கிறார்கள் ரஷ்யப் பெண்கள். முக்கியமாக, ஆண்களுடன் போட்டிப் போடுவதில்லை” என்கிறார்கள் சீன மணமகன்கள். ஆனால் சீனாவில் 120 ஆண்களுக்கு 100 பெண்கள்தான் இருக்கிறார்கள். சீனாவின் ஒரு குழந்தைத் திட்டமும் ஆண் குழந்தைகள்தான் வேண்டும் என்று நினைப்பதும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான முக்கியக் காரணங்கள். “இனியும் ஒரே இனத்துக்குள், ஒரே நாட்டுக்குள் மணமக்களைத் தேடுவது சாத்தியமில்லை. அதனால்தான் இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கிறோம். பிரமாதமாகப் போய்க்கொண்டிருக்கிறது” என்கிறார் எலெனா சுவோரோவா.

திரைக்கடல் ஓடியும் மணமகள் தேடு!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ டைஹின், உருளைக் கிழங்குகளில் இருந்து பாலாடைக்கட்டியை உருவாக்கியிருக்கிறார். பொட்டேடோ மேஜிக் கம்பெனியின் நிறுவனரான ஆண்ட்ரூ டைஹின், 12 ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார். “சீஸ், பொட்டேடோவை இணைத்து சாட்டோ என்று பெயரிட்டிருக்கிறேன். பாலாடைக்கட்டியைப் போலவே இருக்கும், உருகவும் செய்யும். இதில் வேறு எந்த ரசாயனங்களும் சேர்க்கவில்லை. உருளைக்கிழங்கை ஒரு குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தி, சாட்டோவை உருவாக்கியிருக்கிறோம்.

பாலாடைக் கட்டியில் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்யலாம். சாட்டோவை வைத்து பாலாடைக்கட்டியாகவும் பாலாகவும் பயன்படுத்தலாம். ஐஸ்க்ரீம்களில் சேர்க்கலாம். உருளைக்கிழங்கு சுவையில்தான் இருக்கும். விரைவில் சாட்டோ, உணவுத் தொழிற்சாலைகளில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர இருக்கிறது. மெல்பர்னில் ஒருவர் ‘லிக்விட் பொட்டேடோ’ தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். விலங்குகளில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களுக்கு மாற்றாக, விவசாயப் பொருட்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதே எங்களின் லட்சியம்” என்கிறார் ஆண்ட்ரூ டைஹின்.

சாட்டோ, நம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளுமா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

வணிகம்

1 hour ago

மேலும்