இந்துக்களுக்கு ஆதரவாக வங்கதேச மக்கள் பேரணி

By செய்திப்பிரிவு

வங்க தேசத்தில் தாக்குதலுக்கு உள்ளான இந்துக்களுக்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் பலரும் பேரணி நடத்தினர்.

இந்தியாவைப் போலவே வங்க தேசத்தில் இந்து கோயில்களில் துர்கா பூஜை விழா நடந்து வருகிறது. அங்குள்ள கொமில்லா நகரில் இந்து கோயில்களில் ஒரு கும்பல் திடீரென்று தாக்குதல் நடத்தியது.

துர்கா பூஜை விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் சேதப்படுத்தப்பட்டன. அங்கிருந்த பக்தர்கள் தாக்கப்பட்டனர். சந்த்பூர், ஹாஜிகன்ஜ், பெகுலா உள்ளிட்ட நகரங்களிலும் கோயில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதையடுத்து நான்கு நகரங்களில் வன்முறை ஏற்பட்டது. கலவரத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். வன்முறையில் 4 பேர் பலியாகினர். 22 பேர் காயம் அடைந்தனர். வன்முறை தொடர்பாகப் பலரைக் கைது போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் மத ரீதியாகத் தவறான தகவல் பரவியதே கலவரம் ஏற்படக் காரணம் என விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

வங்க தேசத்தில் இந்து கோயில்கள் அருகே அமைக்கப்பட்ட துர்கா பூஜை பந்தல்கள் சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில் வங்க தேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், ஆளும் கட்சியினர், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

பேரணியில் ”இந்த வகுப்புவாத வன்முறை நிறுத்துங்கள், வங்கதேசம்”.. ”உங்கள் குழந்தைக்கு அன்பு செலுத்தக் கற்றுக்கொடுங்கள்... வெறுப்பை அல்ல”... என்று எழுதப்பட்ட பேனர்களைத் தாங்கி மக்கள் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 secs ago

வலைஞர் பக்கம்

20 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

51 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்