அதிக கடன் சுமை கொண்ட 10 நாடுகள்: பெயர்களை வெளியிட்ட உலக வங்கி

By செய்திப்பிரிவு

உலக அளவில் அதிக கடன் சுமை கொண்ட முதல் 10 நாடுகளின் பெயரை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான சர்வதேசக் கடன் சுமை குறித்த புள்ளிவிவர அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், “அங்கோலா, வங்கதேசம், எத்தியோப்பியா, கானா, கென்யா, மங்கோலியா, நைஜீரியா, பாகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், ஜாம்பியா ஆகிய நாடுகள் கடன் சுமை அதிகம் கொண்டுள்ள முதல் 10 நாடுகள்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்த நாடுகளுக்கு அதிக கடன் உள்ளது. இந்த நிலையில் கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு அந்தக் கடன்களைத் தற்காலிகமாக ரத்து செய்யும் நடைமுறைக்கு அந்த நாடுகள் தகுதி பெற்றுள்ளன.

2020ஆம் ஆண்டு இந்த நாடுகளின் மொத்தக் கடன் இருப்பு 509 பில்லியன் அமெரிக்க டாலர்கள். 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், இது 12% அதிகம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காரணமாக உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. அதுவும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் கடன் சுமை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

11 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்