சவுதி விமான நிலையம் மீது வெடிகுண்டுகள் நிரப்பி ட்ரோன் தாக்குதல்; 10 பேர் காயம்

By செய்திப்பிரிவு

சவுதியின் தெற்கு நகரமான ஜிசானில் உள்ள கிங் அப்துல்லா விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர்.

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதேபோல் ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையினான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்த உள்நாட்டு போர் காரணமாக ஏமனில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் முன்னாள் அரசுப்படைகளுக்கும் 2015 ஆம் ஆண்டு மூண்ட சண்டை சுமார் ஒரு கோடி பேரை நடுவீதிக்குக் கொண்டு வந்தது. உண்ண உணவு, பருக நீர், சிகிச்சைக்கு மருந்து, தேவைக்கு மின்சாரம் என எதுவும் இல்லாமல் பல கோடிக்கும் அதிகமானோர் வாழ்ந்து வருவதாக 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மதிப்பிடப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளில் போதுமான உணவு இல்லை. மின் நிலையங்களில் 95 சதவிகிதம் குண்டுவீச்சில் சேதமடைந்துவிட்டதால், பல நகரங்கள் மாதக்கணக்கில் இருளிலேயே தவித்து வருகின்றன. மொத்தமுள்ள இரண்டரைக் கோடி மக்களில் இரண்டு கோடி மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் மனிதநேய உதவிகள் தேவைப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது.

சவுதியின் தெற்கு நகரமான ஜிசானில் உள்ள கிங் அப்துல்லா விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர்.

ஆறு சவுதி நாட்டினர், மூன்று வங்கதேசத்தவர்கள் மற்றும் ஒரு சூடான் நாட்டைச் சேர்ந்தவர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் விமான நிலையத்தின் சில முகப்பு கண்ணாடிகளும் உடைந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்