20 ஆண்டுப் போர் முடிந்தது: ஆப்கனிலிருந்து வெளியேறின அமெரிக்கப் படைகள்

By பிடிஐ


ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக கடந்த 20 ஆண்டுகளாக செய்த போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் கடைசி விமானம் காபூலில் உள்ள ஹமீது கர்சாய் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது.

கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரி்க்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் தகர்த்தனர். அந்தத் தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்க உறுதிபூண்டது. அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் கொடுத்திருந்த தலிபான்கள் மீது போர் தொடுத்து, அவர்களின் ஆட்சியை அமெரிக்க படைகள் அகற்றின. ஜனநாயக ரீதியிலான அதிபர் தேர்தல் நடத்தி , புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறுவப்பட்டன.

ஆனால் தோல்வி கண்ட தாலிபன்கள் மெல்ல தங்களை பலப்படுத்திக் கொண்டனர். போர் ஆண்டுக்குக் கணக்கில் நீண்டது. தாலிபன்கள் தங்கள் எதிர்ப்பை வலுப்படுத்தினர். இருதரப்பிலும் நடந்த போரில் கடந்த 20 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர், அப்பாவி மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். இறுதிவரை அமெரிக்கா, நேட்டோ படைகளுக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை.

இதையடுத்து, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலக்கப்படும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிய அதிபராகவந்த ஜோ பைடன், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கனிலிருந்து வெளியேறும் என்று அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து மெரிக்க படைகள் முழுமையாக வெளிேயறத் தொடங்கியதையடுத்து, தலிபன்கள், பல்வேறு மாகாணங்களைக் கைப்பற்றி, முழுமையாக தங்கள்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கடந்த 15-ம் தேதி ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறியதும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கன் முழுமையாக வந்தது.

இந்நிலையில் ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் வெளியேற வேண்டும் என்பதால், அந்தக் காலக்கெடு முடிவதற்கு முன்பே, அமெரிக்க ராணுவத்தின் கடைசி விமானம், காபூல் ஹமீது கர்சாய் விமானநிலையத்திலிருந்து இன்று வெளிேயறியது.

இதுகுறித்து அமெரிக்க மத்தியப்படையின் காமாண்டர் ஜெனரல் ஃபிராங் மெக்கென்ஸி நிருபர்களிடம் கூறியதாவது:

ஜெனரல் ஃபிராங் மெக்கென்ஸி

“ ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறிவிட்டன என்பதை இந்த நேரத்தில் அறிவிக்கிறேன். இதன் மூலம் அமெரிக்க மக்கள், ஆப்கான் மக்கள், பிறநாட்டவர் என அனைவரையும் வெளியேற்றும் திட்டமும் நிறைவடைந்தது, 20 ஆண்டுகாலப் போரும் முடிந்தது. அமெரிக்க அரசைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஆப்கானிலிருந்து முழுமையாக வெளியேறிவிட்டனர்.

கடைசியாகப் புறப்பட்ட விமானத்தில் அமெரிக்க மக்கள் யாருமில்லை. ராணுவத்தினர் அனைவரும் வெளியேறிவிட்டனர். தகுதியான ஆப்கானிஸ்தான் மக்கள், அமெரிக்கர்கள் யாரேனும் இருந்தால், இன்று வரை வெளியேற வாய்ப்பு வழங்கப்படும். 20 ஆண்டுகால போர் சில மணிநேரங்களில் முடிவுக்குவர உள்ளது.

இது சாதாரணப் போர் அல்ல, இந்த போரில் 2,461 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். கடந்த வாரம் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் தியாகத்தை நினைவுகூர்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தலிபான்கள் வரவேற்றுள்ளனர். தலிபான்கள் பெர்சிய மொழியில் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ அனைத்து முஜாகிதீன்கள், வீரர்கள், நம்முடைய தேச மக்களுக்கு வாழ்த்துகள். இன்று, அனைத்து வெளிநாட்டவர்களும் நம் தேசத்தைவிட்டு, தியாக பூமியைவிட்டு வெளியேறிவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

13 mins ago

தமிழகம்

23 mins ago

இணைப்பிதழ்கள்

40 mins ago

இணைப்பிதழ்கள்

51 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்