தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஊக்கத்தொகை: அமெரிக்கா

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் டெல்டா வைரஸ் காரணமாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு 100 டாலர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது பரிசோதனைகளை அதிகரிக்குமாறும் அவர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 99 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 400க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 3.5 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாஸி கூறுகையில், “அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகப் பதிவு செய்யப்படும் கரோனா தொற்றுகளில் 80%க்கும் மேல் டெல்டா வைரஸால் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தடுப்பூசி காரணமாக அதிகமான நபர்கள் மருத்துவமனைகளில் வந்து அனுமதிக்கப்படுவது குறைந்துள்ளது. அமெரிக்காவின் சில இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் வேகம் குறைந்துள்ளது. அதனை அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் தடுப்பூசி இலக்கு எட்டப்படாமல் இருப்பதற்கு சமூக ஊடகங்களே காரணம் என்று கடந்த வாரம் அமெரிக்க அரசு கூறியிருந்தது. இதற்கு ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மறுப்பு தெரிவித்திருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்