ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிகரிக்கும் கரோனா

By செய்திப்பிரிவு

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,218 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை தரப்பில், “ ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23, 218 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தொடர்ந்து கரோனா அதிகரித்து வருகிறது. மாஸ்கோவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 6, 893 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 112 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள தொற்று பரவலுக்கு டெல்டா வைரஸே காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யா ஆறாவது இடத்தில் உள்ளது. கரோனா தடுப்பூசிகளைக் குறைவாகச் செலுத்திவருவதே கரோனா பரவலுக்குக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளன.

ஸ்புட்னிக் கரோனாவுக்கு எதிராக 91.6% சிறப்பாகச் செயலாற்றக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 68 நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

தமிழகம்

21 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

20 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்