மீண்டும் ட்விட்டரில் ட்ரெண்டாகும் ட்ரம்ப்: காரணம் அவரைப்போலவே தோற்றம் கொண்ட குல்ஃபி வியாபாரி

By செய்திப்பிரிவு

ட்விட்டரில் மீண்டும் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார் முன்னாள் அதிபர் ட்ரம்ப். காரணம் அவரைப்போலவே தோற்றம் கொண்ட குல்ஃபி வியாபாரி.

அமெரிக்காவின் 45வது அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப் அவர் பதவியேற்றதிலிருந்து ட்விட்டரில் மிகவும் பரபரப்பாக இயங்கினார். அவரது உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளால் அடிக்கடி அவர் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உலகளவில் முதலிடத்திற்கு வந்துவிடுவார்.

அப்படித்தான், கரோனா தொற்று சிகிச்சையாக கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்தலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த நிமிடமே அதை விளையாட்டாகக் கூறியதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், முன்னாள் அதொபர் ட்ரம்ப் தற்போது மீண்டும் ட்விட்டரில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், இந்த முறை அந்தக் காரணம் சற்று வினோதமாகவே இருக்கிறது.

பாகிஸ்தானில் குல்ஃபி விற்கும் தொழிலாளி ஒருவர் தனது தொழிலின்போது அவர் பாட்டுப்பாடி குல்ஃபி விற்பார். இதனாலேயே அவர் அங்கு பிரபலமாக இருக்கிறார். அவருடைய வெள்ளை நிறத் தலையும் தோற்றமும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை ஒரு நொடியேனும் நினைவுபடுத்தாமல் இருக்காது.

அவர் பாட்டுப்பாடி குல்ஃபி விற்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக அதனாலேயே ட்ரம்ப் ட்விட்டரில் மீண்டும் ட்ரெண்டாகத் தொடங்கியிருக்கிறார். அந்த வீடியோவை பாகிஸ்தான் பாடகரும், சமூக ஆர்வலருமான ஷேசாத் ராய் பகிர்ந்திருந்தார். அதன் பிறகு அந்த வீடியோ வைரலானது. அந்த வீடியோவைப் பகிர்ந்த ஷேசாத் யாருக்காவது அவரைத் தெரிந்தால் தொடர்பு ஏற்படுத்தித் தரவும் என்றார்.

அவரோ, குல்ஃபி வியாபாரியின் குரலால் ஈர்க்கப்பட்டு தேட நெட்டிசன்களோ அவருடைய தோற்றம் ட்ரம்ப்பைப் போல் இருப்பதை சுட்டிக்காட்டி ட்ரெண்டாக்குகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

45 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்