சுற்றுலாப் பயணிகளுக்கு கனடா புது அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று கனடா தெரிவித்துள்ளது.

கனடாவில் கரோனா தொற்று குறைந்துள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கனடா வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிவிப்பில், “கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கனடா வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. மற்றவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற சான்றிதழைக் கனடாவில் நுழைவதற்கு முன்னர் பெற்றிருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் கரோனா தடுப்பூசிகளை வேகமாகச் செலுத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக கனடாவில் 61% பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் கரோனா தடுப்பூசியைப் பெரும்பாலான அளவில் செலுத்திய இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ், கனாடா போன்ற நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

28 mins ago

சுற்றுச்சூழல்

38 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

33 mins ago

விளையாட்டு

54 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்