பிரிட்டன் சுற்றுலா பயணிகளுக்கு பிரான்ஸ் கட்டுப்பாடு

By செய்திப்பிரிவு

கரோனா பரவலை த்தடுக்கும் பொருட்டு பிரிட்டன் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை பிரான்ஸ் விதித்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் ஊடகங்கள் தரப்பில், “ இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக அறியப்பட்ட b.1.617 கரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளதால் பிரிட்டனிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அரசு விதித்துள்ளது.

அதன்படி பிரிட்டனிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தலுக்கு பின்னரே அனுமதிக்கபடுவார்கள் என்று பிரான்ஸ் அரசு கூறியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

b.1.617 என்ற உருமாற்றம் அடைந்த கரோனா அதிக அளவில் பரவக் கூடியது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் கரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் அங்கு பல தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் பி.1.617 வகை வைரஸ் தற்போது உலகளவில் 53 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த வகை வைரஸ்கள் மூன்று வகைகளாக உள்ளன. பி.1.617.1, பி.1.617.2, பி.1.617.3 ஆகிய பிரிவுகளில் உள்ளன.

பி.1.617.1 வகை வைரஸ்கள் 41 நாடுகளிலும், பி.1.617.2 வகை உருமாற்ற வைரஸ் 54 நாடுகளிலும், பி.1.617.3 வகை வைரஸ் 6 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

பல்வேறு நாடுகளில் கரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

26 mins ago

சுற்றுச்சூழல்

36 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

31 mins ago

விளையாட்டு

52 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்